Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: டி20 உலககோப்பையை இந்தியா வெல்ல சூர்யகுமார் எடுத்த இந்த 3 முடிவே காரணம்.. சபாஷ்!

அகமதாபாத்: டி20 உலக கோப்பையை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்று சரித்திர சாதனையை படைத்திருக்கிறது. கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி இந்த மைல்கல்லை எட்டிருக்கிறது. சொந்த மண்ணில் முதல் முறையாக கோப்பையை வென்ற அணி, தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்ற அணி என்ற மூன்று பெரும் சாதனை தற்போது இந்தியாவுக்கு சொந்தமாகி இருக்கிறது.

குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற ஜாம்பவான் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி சாதித்ததற்கு சூரியகுமார் எடுத்த தைரியமான முடிவே காரணம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றாலும் அணியை அபாரமாக கட்டமைத்து விட்டு தான் கேப்டன் ரோகித் சென்றார்.

இந்த தருணத்தில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடக்கூடிய சில வீரர்களை இணைத்தாலே அணி பலம் அடைந்து விடும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்பார்த்தனர். மேலும் டி20 போட்டிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. முன்பெல்லாம் 170 முதல் 180 ரன்கள் எடுத்தாலே போதுமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது 240 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு என்ற நிலை மாறிவிட்டது.

இப்படிப்பட்ட சூழலில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் தான் அணிக்கு தேவை. இந்த தருணத்தில் தான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் மூலம் சஞ்சு சாம்சன், திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் அணிக்குள் வந்தனர்.

இப்படி இந்திய அணி பல இருதரப்பு தொடர்களில் வெற்றியை பெற்று வந்த நிலையில் தான் கௌதம் கம்பீர் ஒரு குழப்பத்தை மேற்கொண்டார். அதாவது டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில்லுக்கு t20 அணியில் வாய்ப்பு கொடுத்து அவரை துணை கேப்டன் ஆகவும் நியமனம் செய்தார்.

ஆனால் கில் பெரிய அளவு டி20 போட்டிகளில் சாதிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் இயல்பான அதிரடி வீரர் கிடையாது. பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்க்க கூடியவர். அவருடைய ஆட்டம் தற்போது மாறிவரும் டி20 போட்டிகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்று பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் கம்பீர் அவரை விடாதபடி இருந்தார்.

இந்த தருணத்தில் தான் இந்திய அணி ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்,தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் ஆகிய போட்டிகளை வென்றாலும் கில் ஆட்டம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கான அணியை அகர்கர் அறிவிக்கும் போது சூரியகுமார் யாதவ் தைரியமாக ஒரு முடிவு எடுத்தார்.

அதன்படி தமக்கு கில் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக இசான் கிஷன் மற்றும் ரிங்கு சிங்கை அணியில் சேருங்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்க கில் அதிரடியாக நீக்கப்பட்டார். இசான் கிஷன் அணிக்கு வந்தவுடன் அது அணியின் பேட்டிங்கை பல மடங்கு பலமான அணியாக மாற்றிவிட்டது.

இந்த தருணத்தில் தான் உலகக்கோப்பை தொடங்கிய போது எதிர்பார்த்தபடி அபிஷேக் ஷர்மாவால் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் பிளேயிங் லெவனனில் சஞ்சு சாம்சனை கொண்டு வந்து அவருக்கு தொடக்க வீரர் என்ற வாய்ப்பை வழங்கினார். இதன் மூலம் சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து மூன்று அரை சதம் அடித்தார்.

இந்திய அணி தற்போது வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே சஞ்சு சாம்சன் இந்த ஆட்டம் தான். இதைப் போன்று பந்துவீச்சில் பும்ராவை தான் ஆரம்ப கட்டத்தில் சில ஓவர்கள்தான் வழங்குவேன். இறுதிக் கட்டத்தில் தான் அவருக்கு ஓவர்களை கொடுப்பேன் என்று சூரியகுமார் யாதவ் விடாப்படியாக இருந்தார். அதுவும் அவருக்கு கை கொடுத்தது. இப்படி சூரிய குமாரி எடுத்த முடிவின் காரணமாக தான் இந்திய அணி தற்போது கோப்பையை வென்றிருக்கிறது.

Story first published: Monday, March 9, 2026, 7:15 [IST]
Other articles published on Mar 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+