Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: 3 வருசத்துக்கு முன்னால் நடந்தது பற்றி கவலை இல்லை.. எந்த பிட்ச் இருந்தாலும் விளையாடுவோம்- சூர்யகுமார்

அகமதாபாத்: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் தன் வாழ்நாளில் மிகவும் முக்கியமான போட்டியில் இன்று விளையாட உள்ளார். அகமதாபாத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் டி20 உலககோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு ரோஹித் ஷர்மா ஓய்வு பெற்றதை அடுத்து, சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து, இந்திய அணி இதுவரை எந்த ஒரு தொடரையும் இழக்கவில்லை. மேலும், 2025 ஆசிய கோப்பையையும் வென்றுள்ளது.2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிளாக் சாய்ல் பிட்ச் பயன்பாடு இந்தியாவுக்கு எதிராகப் போனது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதந்கு பதில் அளித்த கேப்டன் சூர்யகுமார், "எந்த வகை ஆடுகளமாக இருந்தாலும் பரவாயில்லை, இது உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அது நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது 2026. இங்கு இருந்து நான் கிளம்பினால், நான் நிச்சயம் அதை கவனிப்பேன். நான் நேரடியாக டிரஸ்ஸிங் அறையில் இருந்து வந்துள்ளேன். எனக்கு எந்த பிட்ச் கிடைத்தாலும் பரவாயில்லை."

"நாங்கள் இந்தத் தொடர் முழுவதும் இரண்டு வகை பிட்சுகளிலும் விளையாடி உள்ளோம். அதனால், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். இதன் மூலம், எந்த சூழலையும் சமாளிக்க அணி தயாராக உள்ளது என்பதைக் காட்டினார்.

போட்டியின் முடிவில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பனிப்பொழிவு குறித்தும் சூர்யகுமார் யாதவ் பேசினார்., "நான் ஐசிசியில் அத்தகைய நிலைக்கு வரும்போது, இறுதிப் போட்டி மாலை 3 மணிக்கு தொடங்க வேண்டுமா என்று நான் உங்களுக்குச் சொல்வேன். ஆனால், இதற்கு நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும். பந்துவீசும்போது வேறு வழியில்லை."

"ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் அதிகப் பனிப்பொழிவின் கீழ் நீங்கள் நிறைய விளையாடியுள்ளீர்கள். எனவே, உங்கள் பயிற்சி மற்றும் அனுபவத்தை நம்பி இந்தியாவுக்காகச் செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

2026 டி20 உலகக் கோப்பையில், இந்திய அணி எட்டு போட்டிகளில் ஆறில் முதலில் பேட் செய்து இலக்கை வெற்றிகரமாக பாதுகாத்து வெற்றி பெற்றுள்ளது. இதில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியும் அடங்கும்.

Story first published: Sunday, March 8, 2026, 6:30 [IST]
Other articles published on Mar 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+