Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்த நியூசிலாந்து வீரரால் இந்தியாவுக்கு சிக்கல்.. இரவு 9.14 மணிக்கு திருப்புமுனை.. பிரபல ஜோதிடர் கணிப்பு

அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா ஒரு 'கேம் சேஞ்சராக' மாறுவார் என்று ஜோதிடர் சுமித் பஜாஜ் கணித்துள்ளார்.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ரச்சின் ரவீந்திராதான். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், ஆறு இன்னிங்ஸ்களில் 6.88 என்ற எக்னாமி விகிதத்தில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும், ஆறு போட்டிகளில் 136.17 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 128 ரன்களையும் குவித்துள்ளார்.

26 வயதான ரச்சின், அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, 4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இறுதிப் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு நியூசிலாந்து வீரராக ஆல்ரவுண்டர் கிளென் ஃபிலிப்ஸை பஜாஜ் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இன்று அகமதாபாத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ரச்சின் ரவீந்திரா குறித்து மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்."

"பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் அவர் நியூசிலாந்து அணிக்கு முக்கிய திருப்புமுனையாக மாறக்கூடும். கிளென் ஃபிலிப்ஸும் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான வீரர்." என்று குறிப்பிட்டுள்ளார். கிளென் ஃபிலிப்ஸ், நடப்பு தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் 160 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் 176 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில், ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, 9.33 என்ற எக்கனாமி விகிதத்தில் செயல்பட்டுள்ளார்.

இந்த முக்கிய இறுதிப் போட்டியில் இரவு 9:14 மணியளவில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படக்கூடும் என்று சுமித் பஜாஜ் தனது மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். விக்கெட்கள் விழுவதற்கு அல்லது ஆட்டத்தில் மாற்றம் நிகழ்வதற்கு சாத்தியமான சில குறிப்பிட்ட நேரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அவரது கணிப்பின்படி, 7:09-7:13 விக்கெட்டுக்கான வாய்ப்பு, 7:14-7:18 முக்கிய விக்கெட், 7:22-7:26 முக்கியம்), 7:44-7:52 (பிந்தைய விக்கெட்), 8:23-8:27, 8:32-8:36, 8:41-8:49, 8:57 வரை, 9:20-9:29 (இறுதி நேரத்தில் விக்கெட்), 9:33-9:37 (முக்கிய விக்கெட்), 9:55-10:04, 10:35-10:40, 10:45-10:50 ஆகிய நேரங்களில் விக்கெட்கள் அல்லது ஆட்டத்தில் மாற்றங்கள் நிகழலாம்.

குறிப்பாக, இரவு 9:14 மணியளவில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படக்கூடும், அதன் பின்னர் ஆட்டம் ஒரு வழிப்பாதையாகவே செல்லும் என்றும் அவர் கணித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் முக்கிய பந்துகளாக 2.3-2.4, 4.1, 6வது ஓவர், 6.1-6.3, 8.2, 9.1, 10.2-10.3, 12.3-12.6, 13.4-13.6, 14.4-14.5, 15.5, 17.5-17.6, 18.1-18.3, 19.2-19.4 ஆகியவற்றை சுமித் பஜாஜ் பட்டியலிட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணி இந்தியாவை இதுவரை மூன்று முறை எதிர்கொண்டு, அனைத்திலும் 3-0 வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒட்டுமொத்த டி20 போட்டிகளின் நேருக்கு நேர் மோதலில் இந்தியா 18-11 என்ற சாதனையுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.

Story first published: Sunday, March 8, 2026, 15:33 [IST]
Other articles published on Mar 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+