Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9 வருடங்களில் இப்படி நடந்ததே இல்லை.. கோலி கேப்டன்சியில் இதுதான் முதல் முறை.. அவமானப்பட்ட இந்திய அணி!

கிறைஸ்ட்சர்ச் : இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என வைட்வாஷ் தோல்வியை சந்தித்தது.

Recommended Video

IND VS NZ TEST | India's first whitewash in 9 years

கடந்த ஒன்பது வருடங்களில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் வைட்வாஷ் தோல்வியை சந்தித்ததில்லை. அந்த பெருமையை இந்த தொடர் அடித்து நொறுக்கி உள்ளது.

மேலும், கேப்டன் கோலியின் தலைமையில் இது மோசமான தோல்வியாக அமைந்தது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை 5 - 0 என வென்று அசத்தலாக இந்த சுற்றுபயணத்தை துவங்கி இருந்தது. எனினும், அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 0 - 3 என இழந்து இருந்தது. அந்த நிலையில், டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

நியூசிலாந்து நிலை

நியூசிலாந்து நிலை

நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் வைட்வாஷ் வெற்றி பெற்றாலும், முன்னதாக ஆடிய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 0 - 3 என மோசமான தோல்வியை சந்தித்து டெஸ்ட் அரங்கில் பின்தங்கி இருந்தது. அதனால், இந்திய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு இருந்தது.

முதல் போட்டி தோல்வி

முதல் போட்டி தோல்வி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இரண்டு இன்னிங்க்ஸிலும் இந்திய அணியால் 200 ரன்களை தாண்ட முடியவில்லை. கோலி, புஜாரா என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்து இருந்தனர்.

இரண்டாவது போட்டியில் என்ன ஆனது?

இரண்டாவது போட்டியில் என்ன ஆனது?

இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் முன்னேறும் என எதிர்பார்த்த நிலையில், இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 242 ரன்கள் எடுத்து, முதல் இன்னிங்க்ஸில் 7 ரன்கள் முன்னிலையும் பெற்றது. எனினும், இரண்டாம் இன்னிங்க்ஸில் சொதப்பி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வைட்வாஷ் தோல்வி

வைட்வாஷ் தோல்வி

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டிலும் தோல்வி அடைந்து 0 - 2 என படு தோல்வி அடைந்து இருந்தது இந்திய அணி. இந்த வைட்வாஷ் தோல்வி இந்திய அணி மீது கடும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது.

9 ஆண்டுகளில் முதல் முறை

9 ஆண்டுகளில் முதல் முறை

கடைசியாக 2011ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் வைட்வாஷ் தோல்வியை சந்தித்து இருந்தது. அதன் பின் அது போன்ற அவமானத்தை சந்திக்காத இந்திய அணி, 2020இல் நியூசிலாந்து அணியிடம் தொடரின் அனைத்து போட்டிகளிலும் தோற்று உள்ளது.

கோலி கேப்டன்சி

கோலி கேப்டன்சி

மேலும், விராட் கோலியின் கேப்டன்சியில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் வைட்வாஷ் தோல்வியை சந்திக்கவில்லை. அந்த பெருமையையும் உடைத்து எறிந்தது நியூசிலாந்து அணி. கோலியின் தலைமையில் இது மோசமான தொடராகவும் அமைந்தது.

மிகக் குறைந்த சராசரி

மிகக் குறைந்த சராசரி

இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஒட்டுமொத்த சராசரி 18.05 ஆகும். இது டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மூன்றாவது மிகக் குறைந்த பேட்டிங் சராசரி ஆகும். முதல் இரண்டு முறையும் கூட நியூசிலாந்து அணிக்கு எதிராகவே இந்திய அணி குறைந்த சராசரியில் ஆட்டமிழந்துள்ளது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இந்தியாவின் இந்த மோசமான செயல்பாடுகள் கடும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது. கோலி இந்த தொடரில் 4 இன்னிங்க்ஸ்களில் வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரையும் பலர் விமர்சித்து வருகிறார்கள். பந்துவீச்சு மட்டுமே ஓரளவு ஆறுதலாக இருந்தது.

Story first published: Monday, March 2, 2020, 19:26 [IST]
Other articles published on Mar 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+