பெங்களூர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி பேட்ஸ்மேன் ஆக இருந்தவர் வீரேந்தர் சேவாக். அதேபோல ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடி வந்தார். அதன் பின் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடி வருகிறார். இந்த நிலையில் இவர்கள் மூவரையும் முந்தி இருக்கிறார் நியூசிலாந்தின் டிம் சவுதி.
இவர் வேகப்பந்துவீச்சாளர் ஆவார். அதே சமயம் பகுதி நேரமாக பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுத்து ஆடி வருகிறார். இந்த நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை கடந்து இருக்கிறார். இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் அவரது அவரது ஸ்ட்ரைக் ரேட் தான். அவரது ஸ்ட்ரைக் ரேட் 82.48 என்பதாக உள்ளது. இந்த ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் டெஸ்ட் போட்டிகளில் 2174 ரன்கள் குவித்து இருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் டிம் சவுத்தி 65 ரன்கள் சேர்த்தார். வெறும் 73 பந்துகளில் அவர் 5 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்து 65 ரன்கள் எடுத்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 89 ஆக இருந்தது.
டெஸ்ட் போட்டிகளில் 2000 ஆவது ஆண்டு முதல் குறைந்தபட்சம் 2000 ரன்கள் அடித்த வீரர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பட்டியலில் டிம் சவுத்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் இருக்கிறார். அவர் 52 இன்னிங்ஸ்களில் 2026 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 87.1 ஆக உள்ளது.
இரண்டாம் இடத்தில் டிம் சவுத்தி 82.7 என்ற ஸ்ட்ரைக்ரேட் உடன் இருக்கிறார். வீரேந்தர் சேவாக் (82.2) ஆடம் கில்கிறிஸ்ட் (82), ரிஷப் பண்ட் (73.7) ஆகியோர் அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர். பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ரன் சேர்த்து வருகிறது.