Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே மாதிரி 2 சம்பவம்! சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்த அதிசய சம்பவங்கள்

மும்பை : பல ஆண்டுகளாக விளையாடப்பட்டு வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு சம்பந்தப்பட்ட சம்பவங்களில் சிலவற்றை குறித்து தற்போது பார்க்கலாம். சில வீரர்கள் ஹாட்ரிக் எடுத்து இருந்தாலும் ஒருவர் ஒரே நாளில் ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும்
ஹாட்ரிக் சாதனை புரிந்தது, இந்த நிகழ்வு மட்டுமே.

28, மே 1912 ல் ஆஸ்திரேலிய லெக் ஸ்பின் பவுலர் ஜிம்மி மாதியூஸ் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக ஓல்ட் ட்ராபார்ட் மைதானத்தில் சாதித்தார்.
இரண்டு பவுலர்கள் மட்டுமே எதிராணி வீரர்கள் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சம்பவம். இங்கிலாந்து ஆப் ஸ்பின் பவுலர் ஜிம் லேக்கர் 1956 ல் மன்செஸ்டர் டெஸ்டில். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக.

india national cricket team cricket cricket history sports news

இந்திய ஆப் ஸ்பின் பவுலர் வெங்கடராகவன் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெல்லி டெஸ்டில், 1965ல் இந்த அரிய சாதனை புரிந்தார்.
கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் இரண்டு முறை மட்டுமே டெஸ்டுகள் டை ( Tie ) யில் முடிவு பெற்றுள்ளன.1960 ல் பிரிஸ்பேன் டெஸ்டில் மேற்கு இந்திய தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் முதல் முறை.

சென்னை எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 1986 ல் ஆஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு இடையில் இரு அணிகளின் மொத்த ஸ்கோரும் சமமாக இருந்தன. டெஸ்ட் டை யில் முடிந்தது மேட்ச்.டெஸ்டுகளில் இந்திய மண்ணில் மட்டும் தான் இரண்டு முறை இரு வீரர்கள் ஒரு இன்னிங்சில் எதிரணி வீரர்கள் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

1999 ல் இந்திய ஸ்பின் பவுலர் அனில் கும்ப்ளே பாகிஸ்தான் அணிக்கு எதிராக சாதித்தார், டெல்லி டெஸ்டில்.2021 ல் இரண்டாவது முறையாக இந்திய மண்ணில் நடைப் பெற்றது. மும்பை மைதானம். நியூசிலாந்து ஸ்பின் பவுலர் அஜஸ் பட்டேல் இந்திய அணியின் 10 வீரர்களையும் ஒரே இன்னிங்சில் அவுட் செய்து அசத்தினார். அஜஸ் பட்டேல் இந்தியாவின் மும்பையில் பிறந்தவர் என்பது குறிப்பிட தக்கது.

அறிமுக டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் தலா 8 விக்கெட்டுகள் என்ற கணக்கில் அந்த டெஸ்டில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதித்த வீரர்கள் இரண்டு நபர்கள் மட்டுமே.1972 ல் ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் பாப் மாஸ்ஸி இங்கிலாந்து அணிக்கு அதிராாக 16 / 137 சாதனை புரிந்தார், லார்ட்ஸ் மைதானத்தில்.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 16 / 136 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் இந்திய லெக் ஸ்பின் பவுலர் நரேந்திர ஹிர்வானி, அன்றைய மெட்ராஸ் டெஸ்டில், 1987 - 88 தொடரில்.ஒரே அணி இரண்டு முறை ஒரே நாளில் இரண்டு இன்னிங்ஸ்களின் விக்கெட்டுகள் அனைத்தையும் இழந்த நிகழ்வுகள்.

2005 ல் ஹராரே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜிம்பாப் வே அணி 59 & 99 எடுத்து தோல்வி அடைந்தது.2012 ல் நேப்பியர் டெஸ்டில்
ஜிம்பாப்வே அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்சில் எடுத்த ரன்கள் 51 & 143 இந்த இரண்டு டெஸ்டுகளிலும் நியூசிலாந்து அணி மகத்தான வெற்றிகளைப் பெற்றது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, October 28, 2024, 17:05 [IST]
Other articles published on Oct 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+