Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: தம்பி! விட்றாத.. சுப்மன் கில்லுக்கு அறிவுரை வழங்கிய விராட் கோலி.. கேட்க தவறிய கேப்டன்

ராஜ்கோட்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தனது இரண்டாவது தொடர் அரை சதத்தை அடித்தார். இந்த மைல்கல்லை எட்டியதும், மூத்த வீரரான விராட் கோலி அவரிடம் ஆலோசனை வழங்கினார். முதல் போட்டியில் நிதானமாக ஆடியதற்கு மாறாக, இம்முறை ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக இன்னிங்ஸைத் தொடங்கினார்.

முதல் பவர்பிளேயில் நிதானமாகத் தொடங்கிய கில், பின்னர் சாக் ஃபௌல்க்ஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து ரன் வேகத்தை அதிகப்படுத்தினார். பவர்பிளேவை திறம்படப் பயன்படுத்தி, முதல் பத்து ஓவர்களுக்குள் பல பவுண்டரிகளை அடித்தார். 13வது ஓவரில் ரோஹித் ஷர்மா வெளியேற, கில் அதே வேகத்துடன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார்.

கிறிஸ்டியன் கிளார்க் வீசிய பந்தில் பவுண்டரி அடித்து அரை சதத்திற்கு நெருங்கிய கில், கைல் ஜேமிசனின் 15வது ஓவரில் தொடர்ந்து ஐந்து டாட் பந்துகளைச் சந்தித்ததால் சற்று காத்திருந்தார். ஆனாலும், அதே ஓவர் முடிவில் ஆஃப்சைடு களத்தைக் கடந்து அருமையான பவுண்டரி அடித்து அரை சதத்தை நிறைவு செய்தார்.

நிதானமான கொண்டாட்டத்திற்குப் பிறகு, விராட் கோலி அவருக்கு அறிவுரை வழங்கினார். அதனை கில், அவர் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.கோலியை சதம் அடிக்க, விராட் கோலி அறிவுறுத்தி இருந்த நிலையில், கில் அதனை பின்பற்ற தவறவிட்டார். முதல் ஒருநாள் போட்டியில் ஷுப்மன் கில் 71 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்தாலும், ரிஸ்ட் ஸ்பின்னர் ஆதித்யா அசோக்கின் பந்தில் எளிதில் அவுட் ஆனார்.

முதல் போட்டியை போல், இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அதே 56 ரன்களில் அவர் மீண்டும் ஆட்டமிழந்தார். 17வது ஓவரில் கைல் ஜேமிசன் வீசிய குட்டைப் பந்தை அடிக்க முயன்று, மிடில் விக்கெட்டில் நின்ற டேரில் மிட்செலிடம் கேட்ச் ஆனார்.கேப்டன் ஆட்டமிழந்ததால், இந்திய அணி 99 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

Story first published: Wednesday, January 14, 2026, 16:58 [IST]
Other articles published on Jan 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+