Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: ஒரே போட்டியில் விராட் கோலி இத்தனை சாதனை படைத்தாரா? சச்சின் ரெக்கார்ட் முறியடிப்பு

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, முக்கியமான ஆட்டங்களில் தனது அபாரமான திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். உலககோப்பை போன்ற ஐசிசி தொடர் மட்டும் அல்லாமல், இருதரப்பு ஒருநாள் தொடர்களின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டிகளிலும் அசத்தியுள்ளார்.

இதுவரை அப்படி இருத்தரப்பு தொடரை தீர்மானிக்கும் 16 போட்டிகளில், அவர் 784 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது பேட்டிங் சராசரி 52.26 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 98.0 ஆகவும் உள்ளது. அத்துடன் 2 சதங்கள், 6 அரை சதங்கள் மற்றும் 124 ரன்கள் அதிகபட்ச ஸ்கோர் அடங்கும்.

மேலும், சவாலான 300-க்கும் மேற்பட்ட ரன்களை துரத்தும் 37 ஒருநாள் போட்டிகளில் 2131 ரன்களை 62.67 சராசரியுடன், 106.4 ஸ்ட்ரைக் ரேட்டில் விராட் கோலி குவித்துள்ளார். இதில் 10 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களும் அடங்கும். இதனால் தான் ரசிகர்கள் இவரை சேஸ் மாஸ்டர் என்று அழைக்கின்றனர்.

இதே போன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியடைந்த போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் (14) மற்றும் கிறிஸ் கெயில் (11) ஆகியோருக்கு அடுத்தபடியாக, விராட் கோலி 9 சதங்களுடன் பிரண்டன் டெய்லருடன் சமநிலை வகிக்கிறார்.

இதே போன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், அதிக மைதானங்களில் சதம் அடித்த வீரர்களில் கோலி 35 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். சச்சின் டெண்டுல்கர் (34), ரோஹித் ஷர்மா (26) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ரிக்கி பாண்டிங், ஹாசிம் ஆம்லா, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் தலா 21 மைதானங்களில் சதங்கள் அடித்துள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அதிக சதங்கள் விளாசியவர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 73 இன்னிங்ஸ்களில் 10 சதங்கள் அடித்து முன்னிலை வகிக்கிறார். இவரைத் தொடர்ந்து ஜாக் காலீஸ் (76 இன்னிங்ஸ், 9 சதம்), ஜோ ரூட் (71 இன்னிங்ஸ், 9 சதம்), சச்சின் டெண்டுல்கர் (80 இன்னிங்ஸ், 9 சதம்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மூன்றாவது போட்டியில் சதம் அடித்த கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 85 சதம் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Story first published: Monday, January 19, 2026, 7:00 [IST]
Other articles published on Jan 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+