For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி நம்பர் 1 பேட்ஸ்மேன் கிடையாது.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட கோலி!

துபாய் : ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலியை முந்தி, ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Recommended Video

Virat Kohli loses No 1 test batsman ranking to Steve Smith

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் படு மோசமாக செயல்பட்ட விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் பலத்த அடி வாங்கி இருக்கிறார்.

ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடருக்கு பின் தவறவிட்ட முதல் இடத்தை மீண்டும் பிடித்து அசத்தி இருக்கிறார். பும்ரா, ஷமி ஆகியோரும் தரவரிசையில் சரிந்துள்ளனர்.

விராட் கோலி நம்பர் 1

விராட் கோலி நம்பர் 1

ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2018ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட போது, இரண்டாம் இடத்தில் இருந்த கோலி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரன் வேட்டை நடத்தி முதல் இடத்தை பிடித்தார். அப்போதைக்கு டெஸ்ட் அணியில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரை தக்க வைத்தார்.

ஸ்டீவ் ஸ்மித் போட்டி

ஸ்டீவ் ஸ்மித் போட்டி

பின் ஸ்டீவ் ஸ்மித் தடையில் இருந்து மீண்டு வந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அந்த தொடரில் சதம் மேல் சதமாக அடித்து மிரட்டிய ஸ்டீவ் ஸ்மித், மீண்டும் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார். கோலி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மீண்டும் கோலி நம்பர் 1

மீண்டும் கோலி நம்பர் 1

பின் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரன் குவித்த கோலி முதல் இடத்தை மீண்டும் பிடித்தார். இருவரும் முதல் இடத்துக்கு கடும் போட்டி போட்டு வந்தனர். எனினும், கடந்த நான்கு மாதங்களாக கோலி முதல் இடத்தில் நீடித்து வந்தார்.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

இந்த நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் கோலி ரன் குவிக்கத் தவறினார். முதல் இன்னிங்க்ஸில் 2 மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

தரவரிசை வெளியீடு

தரவரிசை வெளியீடு

இந்தப் போட்டியின் முடிவில் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியானது. அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கோலி 906 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

அதே இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்கள் குவித்தார். அதன் மூலம் அவர், மூன்றாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷாக்னேவை முந்தி மூன்றாம் இடம் பிடித்தார்.

அடுத்த இடங்கள்

அடுத்த இடங்கள்

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம், ஆறாம் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் எந்த மாற்றமும் இன்றி அதே இடங்களில் தொடர்கின்றனர். புஜாரா மோசமாக ஆடியதை அடுத்து, ஏழாம் இடத்துக்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேறி இருக்கிறார்.

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

நியூசிலாந்து டெஸ்டில் ஓரளவு ரன் சேர்த்த ரஹானே ஒரு இடம் முன்னேறி எட்டாம் இடத்தை பிடித்துள்ளார். புஜாரா இரண்டு இடங்கள் சரிந்து ஒன்பதாம் இடத்தையும், அரைசதம் அடித்த மயங்க் அகர்வால் இரண்டு இடங்கள் முன்னேறி பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

பும்ரா, ஷமி சறுக்கல்

பும்ரா, ஷமி சறுக்கல்

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 3 விக்கெட் எடுத்த அஸ்வின் மட்டுமே முதல் பத்து இடங்களில் இருக்கிறார். அவர் ஒன்பதாம் இடத்தில் 765 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளார். பும்ரா, ஷமி இருவரும் முதல் பத்து இடங்களில் இருந்து கீழே சரிந்துள்ளனர்.

Story first published: Thursday, February 27, 2020, 9:50 [IST]
Other articles published on Feb 27, 2020
English summary
IND vs NZ : Virat Kohli loses no.1 test batsman ranking to Steve Smith
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+