Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு கேப்டன் இந்திய அணிக்கு தேவையா? மோசமான மனநிலையில் கோலி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

வெல்லிங்டன் : நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் படுதோல்விகள் தொடர்ந்து வரும் நிலையில், கேப்டன் விராட் கோலி விமர்சனங்களை நேரடியாக சந்திக்காமல் புறந்தள்ளி வருகிறார்.

ஒருநாள் தொடர் தோல்வியை அடுத்து, ஒருநாள் தொடர் இந்த சமயத்தில் சம்பந்தம் இல்லாதது என்றார்.

முதல் டெஸ்ட் தோல்விக்கு பின், வெளியில் இருந்து பேசுபவர்களை கண்டு கொள்ள மாட்டேன் என் கூறி இருக்கிறார்.

மனநிலை தான் தவறு

மனநிலை தான் தவறு

தோல்விக்கான காரணம் குறித்து அவர் எதுவும் பேசவில்லை. தவறுகளை சாதாரண ரசிகன் கூட சுட்டிக் காட்டும் இந்த இணைய யுகத்தில் அவர் அணியை அவர்களிடம் இருந்து காப்பற்றுவது தான் முக்கியம் என பேசுகிறார். "அவரது மனநிலை தான் தவறு, விமர்சகர்கள் அல்ல" என பல ரசிகர்களும் இணையத்தில் கருத்துக்களை கூறி உள்ளனர்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

2018இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 4 - 1 என படுதோல்வி அடைந்தது. அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த 15 - 20 ஆண்டுகளில் இதுதான் சிறந்த டெஸ்ட் அணி என கூறினார். அது விமர்சனத்தை கிளப்பியது.

கோபப்பட்ட கேப்டன்

கோபப்பட்ட கேப்டன்

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் கேப்டன் கோலியிடம் இந்தியா தோல்வி அடைந்து வரும் நிலையில், எப்படி சிறந்த அணி என் கூறுகிறீர்கள் என கேட்டார். அப்போது கோலி கடும் கோபம் கொண்டு கொந்தளித்தார். நாங்கள் தான் சிறந்த அணி என மார் தட்டிக் கொண்டார்.

வெற்றி - தோல்வி பேச்சுக்கள்

வெற்றி - தோல்வி பேச்சுக்கள்

கோலியை பொறுத்தவரை வெற்றி பெற்றால் அதைப் பற்றி பேசுவதும், தோல்வி அடைந்தால். அந்த தோல்வி ஒன்றுமே இல்லை என்பது போலவும், விமர்சகர்களை கண்டித்து பேசுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். தோல்விக்கான காரணம் குறித்தோ, செய்ய வேண்டிய மாற்றம் குறித்தோ அவர் பேச மாட்டார். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் நாங்கள் சிறந்த அணி என மீண்டும், மீண்டும் கூறுவதையே வாடிக்கையாக செய்வார்.

நியூசிலாந்து டி20 தொடர்

நியூசிலாந்து டி20 தொடர்

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலும் அதே மன நிலையில் தான் இருக்கிறார் கோலி. முதலில் நடந்த டி20 தொடரில் இந்தியா 5 - 0 என அபார வெற்றி பெற்ற போது, வெற்றிக்கு காரணமான வீரர்களை பட்டியலிட்டு பாராட்டினார். அந்த வெற்றியை அவர் ஏற்றுக் கொண்டு தான் அது பற்றி விரிவாக பேசினார்.

ஒருநாள் தொடர் தோல்வி

ஒருநாள் தொடர் தோல்வி

அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 0 - 3 என படு தோல்வி அடைந்தது. அப்போது தோல்வி பற்றி பேசாமல், டி20 உலகக்கோப்பை நடக்க இருக்கும் ஆண்டில், ஒருநாள் தொடர் சம்பந்தம் இல்லாதது என சப்பைக் கட்டு கட்டி, தோல்வி குறித்து பேசவில்லை.

ஆஸ்திரேலியா, வெ.இண்டீஸ் தொடர்கள்

ஆஸ்திரேலியா, வெ.இண்டீஸ் தொடர்கள்

அப்போது சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள், எந்த சர்வதேச தொடரும் சம்பந்தம் இல்லாத, முக்கியமில்லாத தொடர் இல்லை என சாடினர். அதற்கு முன்பு இந்தியா வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் முடிவில் கோலி அவ்வாறு பேசவில்லை. அதை கொண்டாடினார்.

பயிற்சிப் போட்டியில் ஆடவில்லை

கோலியின் மனநிலை குறித்து அப்போதே விமர்சனம் எழுந்தது. அடுத்து டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டியில் கோலி பங்கேற்கவில்லை. அவர் நியூசிலாந்து தொடரில் மிக மோசமான பேட்டிங் பார்மில் இருக்கும் நிலையில், ஏன் பயிற்சி போட்டியில் பங்கேற்கவில்லை? என்ற கேள்வி எழுந்தது.

டெஸ்ட் போட்டி பேட்டிங்

டெஸ்ட் போட்டி பேட்டிங்

அடுத்து நடந்த முதல் டெஸ்டில் அவர் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சேர்த்து எடுத்த ரன்கள் 2 மற்றும் 19 மட்டுமே. கோலி பார்மை இழந்து விட்டதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், அனைத்தையும் சாதாரண விஷயமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தோல்விக்கு பின் பேச்சு

முதல் டெஸ்ட் தோல்விக்கு பின் பேசிய அவர், வெளியில் இருப்பவர்கள் விமர்சனம் மூலம், அணியை மோசமான மனநிலையில் வைத்திருக்க நினைக்கிறார்கள் என கோபப்பட்டார் கோலி. ஆனால், கோலி தான் மோசமான மனநிலையில் இருக்கிறார் என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். சிலர் கேப்டனை மாற்ற வேண்டும் என்றும் கூறத் துவங்கி இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, February 26, 2020, 12:00 [IST]
Other articles published on Feb 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+