Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரு பெஸ்ட் கேப்டனா? கங்குலி, டிராவிட் ரெக்கார்டை முறியடிக்க முடியாமல் திணறும் கோலி.. வெளியான தகவல்!

கிறைஸ்ட்சர்ச் : இந்திய டெஸ்ட் கேப்டன்களில் விராட் கோலி தான் சிறந்த கேப்டன் என கடந்த வருடம் முதல் பேசப்பட்டு வருகிறது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில், முக்கியமான நான்கு நாடுகளில் அவரது வெற்றி, தோல்வி கணக்கை எடுத்துப் பார்க்கும் போது, கங்குலி, டிராவிட் முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.

விராட் கோலி கேப்டனாக இன்னும் அடைய வேண்டிய இலக்கு அதிகம் உள்ளது.

ஆஸ்திரேலிய வெற்றி

ஆஸ்திரேலிய வெற்றி

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது இந்திய அணி. அதுதான் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி ஆகும். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அந்த சாதனையை செய்தது.

குவிந்த பாராட்டு

குவிந்த பாராட்டு

அதையடுத்து இந்திய அணிக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. இதுவரை இருந்த இந்திய அணியின் கேப்டன்களில் மிகச் சிறந்த கேப்டன் விராட் கோலி தான் என பலரும் பாராட்டினார்கள். அதன் பின்பும் இந்திய அணி வெற்றிகளை குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 2 - 0 என வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி பலவீனமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளை வரிசையாக வீழ்த்தி வைட்வாஷ் வெற்றிகளை குவித்தது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

இதையடுத்து நியூசிலாந்து மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது இந்திய அணி. அதில் முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. இந்த தோல்வி கடும் விமர்சனங்களை கிளப்பியது.

சிறந்த கேப்டன் இல்லையா?

சிறந்த கேப்டன் இல்லையா?

விராட் கோலி கேப்டன்சி மீதும் புகார் கூறப்பட்டது. இந்திய மண்ணில் சிறப்பாக செயல்படும் விராட் கோலி, வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில், குறிப்பாக எஸ்.இ.என்.ஏ எனப்படும் நான்கு நாடுகளில் அணியை வழிநடத்துவதில் தடுமாறுகிறார் என விமர்சனம் எழுந்தது.

நான்கு முக்கிய நாடுகள்

நான்கு முக்கிய நாடுகள்

அந்த நான்கு நாடுகள் - தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா. இந்த நான்கு நாடுகளிலும் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்காது. வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும். பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும்.

ஆஸ்திரேலிய வெற்றி பின்னணி

ஆஸ்திரேலிய வெற்றி பின்னணி

இந்த நான்கு நாடுகளில் ஆஸ்திரேலியாவில் மட்டுமே விராட் கோலி கேப்டன்சியில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது. அதிலும் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியைத் தான் இந்தியா வீழ்த்தி இருந்தது.

வெற்றி, தோல்வி சதவீதம்

வெற்றி, தோல்வி சதவீதம்

இந்த நான்கு நாடுகளில் அனில் கும்ப்ளே தவிர்த்து கடைசி நான்கு இந்திய கேப்டன்களின் வெற்றி - தோல்வி சதவீதம் இதுதான்.

விராட் கோலி - வெற்றி 26.67, தோல்வி 60

தோனி - வெற்றி 13.04, தோல்வி 60.87

ராகுல் டிராவிட் - வெற்றி 33.33, தோல்வி 33.33

சவுரவ் கங்குலி - வெற்றி 16.67, தோல்வி 41.67

டிராவிட் முதல் இடம்

டிராவிட் முதல் இடம்

வெற்றி சதவீதத்தில் டிராவிட் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இந்த நான்கு நாடுகளில் 6 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதில் 2 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவை பெற்றுள்ளார். கோலி 15 போட்டிகளில் 4 வெற்றி, 9 தோல்வி, 2 டிராவை பெற்றுள்ளார்.

பின்தங்கிய கோலி

பின்தங்கிய கோலி

தோல்வி சதவீதத்தில் கோலி, கங்குலி, டிராவிட் இருவருக்கும் பின்னே தான் இருக்கிறார். தோனியும், கோலியும் கிட்டத்தட்ட ஒரே அளவு தோல்வி அடைந்துள்ளனர். இந்த புள்ளிவிவரம் மூலம் விராட் கோலி இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Story first published: Friday, February 28, 2020, 19:59 [IST]
Other articles published on Feb 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+