Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை.. கடும் சிக்கலில் கோலி.. அதிர்ச்சித் தகவல்!

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோலி படு மோசமான முறையில் அவுட் ஆனார்.

Recommended Video

INDvsNZ 1st Test | New Zealand won by 10 wickets | இந்தியாவுக்கு மோசமான தோல்வி

முதல் இன்னிங்க்ஸில் 2 ரன் எடுத்த அவர், இரண்டாம் இன்னிங்க்ஸில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து அணியை கை விட்டார்.

கடந்த சில மாதங்களாக விராட் கோலியின் பேட்டிங் பார்ம் கவலைக்குரிய நிலையில் இருக்கிறது.

கோலி பார்ம் அவுட்

கோலி பார்ம் அவுட்

அவர் கடந்த 20 சர்வதேச இன்னிங்க்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 6 அரைசதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். குறைவாக ரன் சேர்த்தது மட்டுமின்றி, கோலி அவுட் ஆகும் விதத்தை வைத்து வெளியாகி உள்ள புள்ளி விவரத் தகவல்கள் அவர் தற்போது பார்ம் அவுட் ஆகி இருப்பதை அழுத்தமாக கூறுகின்றன.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்றது. இதில் டி20 தொடர், ஒருநாள் தொடர் முடிந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

ஒரே ஒரு அரைசதம்

ஒரே ஒரு அரைசதம்

இதில் டி20 தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே கோலி அரைசதம் அடித்தார். மற்ற போட்டிகளில் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. ஒருநாள் தொடரை இந்தியா 3 - 0 என இழந்த நிலையில், டெஸ்ட் தொடரில் இந்தியா ஆடியது.

சதம் இல்லாத 20 இன்னிங்ஸ்

சதம் இல்லாத 20 இன்னிங்ஸ்

முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு சர்வதேச இன்னிங்ஸ்களிலும் எட்ஜ் ஆகி, கேட்ச் கொடுத்து மோசமாக ஆட்டமிழந்த கோலி, 2 மற்றும் 19 ரன்களே எடுத்தார். கடந்த 20 சர்வதேச சர்வதேச இன்னிங்ஸ்களில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

6 இன்னிங்க்ஸ் மட்டுமே

6 இன்னிங்க்ஸ் மட்டுமே

விராட் கோலி ஆறு இன்னிங்க்ஸ்களுக்கு ஒரு சதம் என அடித்து வருகிறார். கடைசியாக நவம்பர் 2019இல் வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்து இருந்தார் கோலி. அதன் பின் ஆடிய 20 சர்வதேச இன்னிங்க்ஸ்களில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள்

வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள்

அதே போல, 2018 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களிலும் கோலி சராசரியாகவே ஆடி வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் வெளிநாட்டு மண்ணில் ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார் கோலி.

பேட்டிங் சராசரி

பேட்டிங் சராசரி

அந்த ஆறு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 418 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி. அதன் சராசரி 38 மட்டுமே. அவரது ஒட்டுமொத்த டெஸ்ட் பேட்டிங் சராசரி 57 ஆக இருக்கும் நிலையில், 38 என்ற சராசரி மிகவும் குறைவாக பார்க்கப்படுகிறது.

மோசமான கால கட்டம்

மோசமான கால கட்டம்

கோலி 11 வருட கிரிக்கெட் வாழ்வில் இதற்கு முன் இரண்டு முறை மோசமான பார்மில் இருந்துள்ளார். 2011இல் 24 இன்னிங்க்ஸ்களில் தொடர்ந்து சதம் அடிக்காமல் இருந்தார். அப்போது அவரது சராசரி 48இல் இருந்து 39 ஆக சரிந்தது. அது கோலியின் ஆரம்ப காலம்.

2014 பார்ம் அவுட்

2014 பார்ம் அவுட்

அதன் பின் 2014இல் 25 இன்னிங்க்ஸ்களில் தொடர்ந்து சதம் அடிக்கவில்லை. அதுவே அவரது மோசமான பார்ம் அவுட் ஆக இன்று வரை கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஆஃப் சைடு பலவீனம்

ஆஃப் சைடு பலவீனம்

தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 9 இன்னிங்க்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அது மட்டுமின்றி, 2014 டெஸ்ட் தொடரில் எப்படி அவுட் ஆனாரோ, அதே போல, ஆஃப் சைடு வரும் பந்தை அடிக்க முயன்று, எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து வருகிறார்.

கவலையில் இந்திய அணி

கவலையில் இந்திய அணி

சிறந்த பேட்ஸ்மேன் ஆன கோலியை சுற்றியே டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் இருந்து வந்தது. இந்த நிலையில், அவரின் பார்ம் அவுட் இந்திய அணிக்கும், அவருக்கும் பெரும் சிக்கலாக மாறி உள்ளது. அடுத்தகட்ட வீரர்கள், கோலி அளவுக்கு தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதே சமயம், கோலி தன் பார்மை விரைவாக மீட்க வேண்டும்.

Story first published: Sunday, February 23, 2020, 15:00 [IST]
Other articles published on Feb 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+