Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: வரலாறு படைத்த விராட் கோலி.. முன்னாள் கேப்டன் கங்குலியின் மாபெரும் ODI சாதனை முறியடிப்பு

வதோதரா: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வதோதராவில் உள்ள கோட்டாம்பி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து வரலாற்றுப் பட்டியலில் முன்னேறியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 1:30 மணிக்குத் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் விளையாடுவதன் மூலம், விராட் கோலி தனது 309-வது ஒருநாள் போட்டியில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம், அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பட்டியலில், முன்னாள் ஜாம்பவான் சௌரவ் கங்குலியை (308 போட்டிகள்) பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

IND vs NZ Virat Kohli Surpasses Sourav Ganguly to Become India s 5th Most Capped ODI Player

அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் (முதல் 6 இடங்கள்):
இந்திய அணிக்காக அதிக முறை ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:

சச்சின் டெண்டுல்கர் - 463 போட்டிகள்
எம்.எஸ். தோனி - 347 போட்டிகள்
ராகுல் டிராவிட் - 340 போட்டிகள்
முகமது அசாருதீன் - 334 போட்டிகள்
விராட் கோலி - 309 போட்டிகள்
சௌரவ் கங்குலி - 308 போட்டிகள்

நீண்ட ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கி வரும் விராட் கோலி, பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். தற்போது அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலிலும் முன்னிலை வகிப்பது அவரது உடற்தகுதிக்கும், நிலையான ஆட்டத்திற்கும் சான்றாக அமைந்துள்ளது. இன்னும் சில போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் அவர் முகமது அசாருதீனின் 334 போட்டிகள் ஆடிய சாதனையை நெருங்கும் வாய்ப்பும் உள்ளது.

2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் இந்தத் தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த தொடருக்கு பின் ஜூலை மாதம் தான் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பதால் அவர்கள் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Story first published: Sunday, January 11, 2026, 15:30 [IST]
Other articles published on Jan 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+