Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை.. அதான் இப்படி அவுட் ஆயிட்டாரு.. கோலியை வறுத்தெடுத்த விவிஎஸ் லக்ஷ்மன்!

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி மிக மோசமாக ஆடி வருகிறது. அதிலும் கேப்டன் கோலி இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் அணியை கை விட்டார்.

கோலி பந்தை அடிக்க வேண்டி, பொறுமை இல்லாமல் ஆடி கேட்ச் கொடுத்து தான் இரண்டு முறையும் ஆட்டமிழந்தார்.

இது குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் வெளிப்படையாக கோலியை விமர்சித்துள்ளார்.

மதித்து ஆட வேண்டும்

மதித்து ஆட வேண்டும்

கோலி நியூசிலாந்து ஆடுகளங்களில் பந்தை எதிர்கொள்ளும் போது அதை மதித்து ஆட வேண்டும். ஆனால், ஒழுக்கம் இல்லாமல் கோலி ஆடியதால் தான் ஆட்டமிழந்தார் என சாடி இருக்கிறார். நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியதையும் அவர் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.

இந்தியா மோசமான பேட்டிங்

இந்தியா மோசமான பேட்டிங்

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்க்ஸில் ஜேமிசன், டிம் சவுதி என் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களிடம் எட்டு விக்கெட்களை பறி கொடுத்தது. ரஹானே 46 ரன்கள் எடுத்ததே இந்திய அணியில் அதிகபட்ச ரன்களாக இருந்தது.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இளம் வீரர்கள் மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களாக வலம் வரும் புஜாரா, கோலி ஆகியோரும் மோசமாக ஆடியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

கோலி தடுமாற்றம்

கோலி தடுமாற்றம்

குறிப்பாக நியூசிலாந்து தொடர் முழுவதும் மோசமாக ஆடி வரும் கோலி, முதல் இன்னிங்க்ஸில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்தியா 183 ரன்கள் பின் தங்கிய நிலையில், கோலி அணியை மீட்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு 19 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

பார்ம் அவுட் ஆனாரா?

பார்ம் அவுட் ஆனாரா?

கடந்த 20 சர்வதேச இன்னிங்க்ஸ்களில் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்த நியூசிலாந்து தொடரில் மட்டுமே 9 இன்னிங்க்ஸ்களில் வெறும் 201 ரன்கள் தான் எடுத்துள்ளார். கோலி பார்ம் அவுட் ஆகி விட்டார் என்ற விமர்சனம் எழத் துவங்கி உள்ளது.

கேன் வில்லியம்சன் அபாரம்

கேன் வில்லியம்சன் அபாரம்

இதே டெஸ்ட் போட்டியில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படும் கேன் வில்லியம்சன் மிக சிறப்பாக ஆடி 89 ரன்கள் சேர்த்தார். அவருடன் ஒப்பிட்டும் பலர் விராட் கோலியின் மோசமான பேட்டிங்கை விமர்சித்து வருகின்றனர்.

லக்ஷ்மன் கருத்து

லக்ஷ்மன் கருத்து

முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறுகையில், போட்டி நடைபெறும் ஆடுகளம் மந்தமாக இருந்தது. பந்து அதிகமாக ஸ்விங் ஆகவில்லை. அப்போது நியூசிலாந்து அணி, இந்திய வீரர்களின் உடலை தாக்கும் வகையில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினர். அதை அவர்கள் ஒழுக்கத்துடன் செய்தனர் என்றார்.

பொறுமையை சோதித்தது

பொறுமையை சோதித்தது

மேலும், அவர்கள் கோலியை ரன் குவிக்க விடவில்லை. பந்து ஸ்டம்ப்புகளுக்கு வீசப்படும் போது கோலி ரன் குவிப்பார். ரன் அடிக்க இடம் கிடைக்கும் போது அவர் ரன் எடுப்பார். ஆனால், பந்து அவரது உடலுக்கு வரும் போது அது அவரது பொறுமையை சோதித்தது என்றார்.

பொறுமை இல்லை

பொறுமை இல்லை

மேலும், விராட் அவுட் சைடு திசையில் வந்த பந்தை அடிக்க தூண்டப்பட்டார். இந்த இன்னிங்க்ஸின் துவக்கத்தில் கோலி காட்டிய பொறுமை அப்போது இல்லை. அவர் இங்கே அடிக்க ஆசைப்பட்ட டிரைவ்களை, இந்திய சூழ்நிலையில் கூட அடிக்க மாட்டார் என்று விமர்சித்தார் லக்ஷ்மன்.

அப்படி ஆட வேண்டும்

அப்படி ஆட வேண்டும்

மேலும், நியூசிலாந்து சூழ்நிலையில் பந்தை மதித்து ஆட வேண்டும். நியூசிலாந்து பந்து வீச்சை சமாளிக்க, கேன் வில்லியம்சன் முதல் இன்னிங்க்ஸில் தன் ஆட்டத்தை எப்படி ஆடினாரோ, அப்படித் தான் ஆட வேண்டும் என மேற்கோள் காட்டினார் லக்ஷ்மன்.

Story first published: Sunday, February 23, 2020, 17:05 [IST]
Other articles published on Feb 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+