Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- துப்பாக்கியை பிடிங்க வாசிங்டன்! நியூசிலாந்தின் 10 விக்கெட்டுகளை எடுத்த 2 தமிழர்கள்

புனே : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் இரண்டு தமிழக கிரிக்கெட் வீரர்கள் அபாரமாக செயல்பட்டு எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்கள்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. எஞ்சி இருக்கும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியாவால் தகுதி பெற முடியும்.

ind vs nz washington sundar r ashwin sarfaraz khan

இந்த நிலையில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணியின் மற்ற வீரர்களின் பந்துவீச்சு கொஞ்சம் கூட எடுபடவில்லை. ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான் கடுமையாக போராடி நியூசிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய அபாரமான மேஜிக் சுழற் பந்துவீச்சை வீசி ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ind vs nz washington sundar r ashwin sarfaraz khan

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ள வாஷிங்டன் சுந்தர் பந்து வீசி, தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். இந்திய அணியில் ஜாம்பவானாக இருக்கும் அஸ்வினை போல் வாஷிங்டன் சுந்தரும் விக்கெட்டுகளை எடுத்திருப்பதை சம்திங் சம்திங் படத்தில் வரும் காட்சியை வைத்து அஸ்வினை போல் வாஷிங்டன் சுந்தரும் நடந்து கொள்வதாக கூறி மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.

ind vs nz washington sundar r ashwin sarfaraz khan

இதேபோன்று கோட் படத்தில் நடிகர் விஜய் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை பிடுங்க சிவா என்று கூறி தன்னுடைய இடத்தை அவருக்கு கொடுப்பது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். தற்போது அதையே மீம்ஸ் ஆக போட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஸ்வின் இனி என்னுடைய இடம் உனக்கு தான் என்று கூறி துப்பாக்கிய பிடுங்க வாஷிங்டன் என்று சொல்வது போல் ரசிகர்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.

ind vs nz washington sundar r ashwin sarfaraz khan

இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர், 7 விக்கெட் வீழ்த்தி மகிழ்ச்சியாக இருக்கும் போது அவருடைய தந்தை ஏன் 10 விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்று மிரட்டுவது போல் உள்ள ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளத்தில் கலை கட்டி வருகிறது. இது எதற்கென்றால் ஒருமுறை வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்காமல் ஆட்டம் இழந்த நிலையில், தமது மகன் 100 ரன்கள் ஏன் அடிக்கவில்லை என்று கூறி தாம் திட்டியதாக அவரது தந்தை மணி சுந்தர் கூறியிருந்தார்.

ind vs nz washington sundar r ashwin sarfaraz khan

இதனால்தான் இப்படி ஒரு மீம்ஸ் போடப்பட்டிருக்கிறது. இதேபோன்று வாஷிங்டன் சுந்தர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் கலக்கி இருப்பதை கொண்டாடும் விதமாக சர்பட்டா படத்தில் ஆர்யா வெற்றி கொண்டாட்டத்தில் கட்டுவது போலவும், சலார் படத்தில் பிரபாஸ் கத்தியை வைத்து நின்று கொண்டிருப்பது போலவும் இந்தியாவுக்கு ஆபத்து வந்தபோது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியை காப்பாற்றி இருப்பதாக மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Thursday, October 24, 2024, 20:06 [IST]
Other articles published on Oct 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+