Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முன்னாள் ஹாங்காங் வீரர்.. இந்நாள் நியூசிலாந்து வீரர் - இந்தியாவுக்கு எதிராக கலக்கிய சாப்மேன் யார்?

ஜெய்ப்பூர்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியில் களமிறங்கினார் மார்க் சாப்மேன்.

Recommended Video

Who is Mark Chapman | IND vs NZ T20 | Oneindia Tamil

நியூசிலாந்து அணி முதல் ஓவரிலே விக்கெட்டுகளை இழந்தாலும், மூன்றாவது வீரராக களமிறங்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் சாப்மேன்.

முதலில் அமைதி, பின் அதிரடி என காட்டிய சாப்மேன், 50 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இப்படி நன்றாக விளையாடுகிறாரே..?? யார் இவர்?

ஹாங்காங்

ஹாங்காங்

நியூசிலாந்தை சேர்ந்த தந்தைக்கும், ஹாங்காகை சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் தான் சாப்மேன். பிறந்து, வளர்ந்தது எல்லாம் ஹாங்காங்கில் தான். தன்னுடைய 20வது வயதில் ஹாங்காங் அணிக்காக 2014ஆம் ஆண்டு டி-20 உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கினார் சாப்மேன்.

சாதனை

சாதனை

2015ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் யு.ஏ.இ. அணிக்காக களமிறங்கினார். முதல் போட்டியிலேயே சதம் விளாசினார் சாப்மேன்.இதன் மூலம் சதம் விளாசிய முதல் ஹாங்காங் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

நியூசிலாந்து

நியூசிலாந்து

ஹாங்காங் அணிக்காக தொடர்ந்து விளையாடினாலும், தனது திறமைக்கு ஏற்ற களம் ஹாங்காங் அல்ல என முடிவு எடுத்தார் சாப்மேன். இதற்காக நியூசிலாந்துக்கு சென்ற அவர் ஆக்லாந்து அணிக்காக உள்ளூர் போட்டியில் விளையாடினார்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஏற்கனவே சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவமும், திறமையும் ஒன்று சேர, நியூசிலாந்து கிரிக்கெட்டில் தனது கால் தடத்தை பதிக்க தொடங்கினார் சாப்மேன். இதன் மூலம் 2018ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது

ஏமாற்றம்

ஏமாற்றம்

சாப்மேன், 2021 டி-20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் சாப்மேனால் ரன் எடுக்க முடியவில்லை. இதனால் பிரதான சுற்றில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது வில்லியம்சன் டி-20 தொடரிலிருந்து விலகியதால் , அவர் இடத்தில் சாப்மேன் களமிறங்கினார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு, அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பதே இலக்காக சாப்மேன் வைத்துள்ளார்.

Story first published: Thursday, November 18, 2021, 16:40 [IST]
Other articles published on Nov 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+