Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia cup: ஹர்திக் பாண்டியாவுக்கு கொஞ்சம் கூட லக் இல்ல.. ஓமனுக்கு விக்கெட் எடுத்து தந்த சஞ்சு சாம்சன்

அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கேப்டன் சூரியகுமார் யாதவ் இன்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அது மட்டுமில்லாமல் சூப்பர் 4 சுற்றுக்கு முன்பு இந்திய வீரர்கள் அனைவருக்கும் பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டும் என்பதற்காக அணியின் பேட்டிங் வரிசையில் அதிரடி மாற்றத்தை செய்தார்.
அதன்படி அபிஷேக் ஷர்மா, கில் ஆகிய தொடக்க ஜோடி மட்டும் அதே பேட்டிங் வரிசையில் களமிறங்கியது.

Ind vs oman

அதன் பின் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் போன்ற வீரர்களுக்கு ப்ரமோஷன் வழங்கப்பட்டது. இதன் மூலம் திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் பின் வரிசையில் களமிறங்குவார்கள். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாட ஹர்திக் பாண்டியா நான்காவது வீரராக களத்திற்கு வந்தார்.

ஹர்திக் பாண்டியா கடந்த ஐபிஎல் போட்டிக்கு பிறகு பெரிய அளவு பேட்டிங்கை செய்யவில்லை. இதனால் இந்த போட்டி அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த தருணத்தில் ஒரு ரன் எடுத்து இருந்தபோது ஹர்திக் பாண்டியா எதிர் திசையில் இருந்தார். அப்போது சஞ்சு சாம்சன் அடித்த பந்து பவுலரின் கையில் பட்டு நேரடியாக ஸ்டெம்பில் அடித்தது.

அப்போது ஹர்திக் பாண்டியா கிரீசுக்கு வெளியே நின்றதால், அவர் ரன் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டார். இதில் மூலம் கொஞ்சம் கூட அதிர்ஷ்டமே இல்லாத வகையில் ஹர்திக் பாண்டியா அவுட் ஆகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து அக்சர் பட்டேல், களத்திற்கு வந்து அதிரடியாக விளையாட முற்பட்டார்.

13 பந்துகளில் அவர் 26 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அக்சர் பட்டேல் நல்ல ஃபார்மில் இருந்த நிலையில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த தருணத்தில் சிவம் துபே களத்திற்கு வந்து அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் எட்டு பந்துகளில் 5 ரன்களில் வெளியேறினார்.

Story first published: Friday, September 19, 2025, 21:32 [IST]
Other articles published on Sep 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+