Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: முதல் பந்திலேயே சிக்சர்..ஷாகின் அஃபிரிடியை கதறவிட்ட அபிஷேக் சர்மா..லெஃப்ட் ஹாண்டில் டீல்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஷாகின் அப்ரிடி வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் ஷர்மா சிக்ஸர் அடித்து அபார தொடக்கத்தை பெற்றார். துபாயில் நடைபெற்று வரும் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒருமுறை மோதினர்.

லீக் சுற்றில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்ற நிலையில், சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Abhishek Sharma

இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபர்கான் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அபிஷேக் ஷர்மா தவற விட்டார். இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து பவுண்டரி, மூன்று சிக்சர் அடங்கும். இறுதியில் சல்மான் ஆகா 17 ரன்களிலும், பகீம் அஷ்ரப் 20 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது ஷாகின் ஓவரை இதற்கு முன்பு இருந்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் எதிர்கொள்ள தடுமாறுவார்கள். குறிப்பாக ரோகித் சர்மா இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள சிரமப்படுவார். இதே துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவின் டாப் வரிசை வீரர்கள் ஷாகின் அப்ரிடியின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது இருக்கும் இளம் படை ஷாகின் பந்துவீச்சை லேப்ட் ஹேண்டில் டீல் செய்கிறது. கடந்த லீக் சுற்றில் ஷாகின் அப்ரிடி வீசிய முதல் பந்திலயே இறங்கி வந்து பவுண்டரி அடித்து அபிஷேக் ஷர்மா அசத்தினார். இந்த நிலையில் ஷாகின் அபிரிடி வீசிய ஷார்ட் பாலை அபிஷேக் ஷர்மா புல் ஷாட் அடித்து சிக்ஸருக்கு விரட்டினார்.

இதனால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர் இதன்மூலம் பயந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது என இந்த ஷாட் மூலம் அபிஷேக் ஷர்மா சொல்லி இருக்கின்றார். பில்டிங்கில் அபிஷேக் ஷர்மா சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டதால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டிங்கில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.

Story first published: Sunday, September 21, 2025, 22:48 [IST]
Other articles published on Sep 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+