IND vs PAK: கார் வென்றது மகிழ்ச்சி.. இந்த இடத்திற்கு ஈஸியாக வரல.. தொடர் நாயகன் விருது வென்ற அபிஷேக்
துபாய்: ஆசிய கோப்பை தொடரை ஒன்பதாவது முறையாக இந்திய அணி வென்று சாதனை படைத்திருக்கிறது. இதற்கு மிகவும் முக்கிய காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா இருந்தார். மூன்று போட்டிகளாக அரை சதம் அடித்து அசத்திருந்தார்.
அது மட்டுமில்லாமல் அவருடைய ஸ்ட்ரைக்கை கிட்டத்தட்ட 200 அருகே இருந்தது. இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா நடக்க ஆசிய கோப்பை தொடரில் 314 ரன்கள் அடித்திருந்தார். இறுதிப்போட்டியில் அவர் சோபிக்க தவறினாலும், அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

தொடர் நாயகன் விருதுக்காக விலை உயர்ந்த காரும் பரிசாக வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய அபிஷேக் ஷர்மா காரை பரிசாகப் பெறுவது எப்போதுமே மகிழ்ச்சி தான் கொடுக்கும் என்று சிரித்தார். தொடர்ந்து பேசிய அவர் உலகக்கோப்பை வென்ற ஒரு அணியின் தொடக்க வீரராக இடம்பெறுவது என்பது சுலபமான காரியம் கிடையாது.
இதற்காக நான் திட்டமிட்டு கடுமையாக உழைத்து இருக்கின்றேன். முதல் பந்தில் இருந்து என்னுடைய அதிரடியை காட்டிருக்கின்றேன். இதற்காக நான் கடுமையாக உழைத்தேன். இதுபோன்ற அதிரடியாக விளையாடினால் உங்களுக்கு பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் இருந்து சில ஆதரவு தேவை. ஏனென்றால் இப்படி அதிரடியாக விளையாடும் போது சில சமயம் நாம் ஆட்டம் இழக்கக்கூடும்.
சில சமயம் அணியின் பெரிய தாக்கத்தையும் நாம் ஏற்படுத்தலாம். நான் ரன்கள் அடிக்காமல் தோல்வி அடையும் போதெல்லாம் என்னுடைய அணி எனக்குத் துணையாக இருந்திருக்கிறது. என்னால் அதிரடியாக விளையாடி அணியும் வெற்றி பெற வைக்க முடியும் என்று தெரியும். இதனால் அதை நான் நம்புகிறேன்.
அதற்கான பணியை நான் தொடர்ந்து செய்து வருகின்றேன். வித்தியாசமான ஆடுகளங்களில் விளையாடும் போது அதற்கு ஏற்ற வகையில் விளையாட நான் திட்டம் வைத்திருக்கின்றேன். பவர் பிளேவை சரியாக பயன்படுத்த வேண்டும். சுழற் பந்து, வேகப்பந்துவீச்சாளர் என யார் வந்தாலும் அவர்களுக்கு எதிராக முதல் பந்தில் இருந்து அதிரடி காட்ட வேண்டும். இப்படி ஒரு மன நிலையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது அணிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications