Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

LOW IQ உள்ளவர்களிடம் வாக்குவாதம் பண்ணாதீங்க.. பாகிஸ்தான் வீரர்கள் மீது அஸ்வின் தாக்கு

மும்பை: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது பரிசளிக்கும் நிகழ்ச்சிகள் பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ், பஹல்காம் தாக்குதல் குறித்தும் இந்திய ராணுவம் குறித்தும் தனது கருத்தை வெளிப்படுத்தியதற்கு பாகிஸ்தான் நாட்டினர் கடும் எரிச்சலை அடைந்தனர்.

இதனால் ஏற்பட்ட வன்மத்தின் காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் சூரியகுமார் யாதவை பன்றியுடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து, இர்பான் பதான் தங்களை நாய் என்று கூறியதாகவும் அதற்கு யாருமே எந்த கேள்வியும் கேட்கவில்லையே என்றும் விளக்கம் அளித்தார்.

Ashwin

இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக சாடிய அஸ்வின் நேர்காணலில் பலரின் மூக்கை உடைத்தார். இது குறித்து பேசி அவர் நான் ஒரு கிரிக்கெட்டர், எனக்கு வரும் மரியாதை களத்தில் நான் எப்படி செயல்பட்டேன் என்பதை பொறுத்து வருகிறது. சில சமயம் எல்லைகளை தாண்டி நாம் பேசுவோம். ஆனால் அதில் சில நல்ல விஷயங்களும் இருக்கும் சில விஷயங்களை வல்லுனர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

விஷயம் தெரியாத சில விஷயத்தை நாம் புரிந்து கொள்ளாமல் பேசினால் அது பிரச்சினையே தரும். நான் அண்மையில் ஒரு கமெண்ட்டை பார்த்தேன். அதை என் வாழ்க்கை முழுவதும் நான் பின்பற்றுகிறேன் உங்களை விட அறிவில் குறைவாக இருப்பவர்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். ஏனென்றால் அவர்கள் தங்களுடைய கீழ் நிலைக்கு உங்களை இழுத்துக் கொண்டு வந்து அவருடைய அனுபவம் மூலம் உங்களை வீழ்த்தி விடுவார்கள்.

இந்த இடத்தில் வேறு ஒரு வார்த்தை வரும் (பன்றி) நான் அது மரியாதை குறைவாக இருக்கும் என்பதால் அந்த வார்த்தையை விட்டுவிட்டு இங்கு வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கின்றேன். அந்த நபர்கள் உங்களுடைய லெவலுக்கு வரவே மாட்டார்கள். ஏன் என்றால் உங்களுக்கு அறிவு இருக்கின்றது. எனவே அதன் படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய நிலைக்கு சென்று நீங்களும் வாக்குவாதம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் தோற்றுப் போய் விடுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையிலும் தோற்றுப் போய் விடுவீர்கள். எனவே அவருடைய நிலைக்கு நீங்கள் செல்ல வேண்டாம் என்பதுதான் என்னுடைய அறிவுரை. ஏனென்றால் அவர்களுடைய களத்திற்கு நீங்கள் சென்று அவருடைய லெவலுக்கு நீங்கள் போட்டி போட்டால் நிச்சயம் தோல்வி நமக்கு தான். கிரிக்கெட் என்பதுதான் நமது பவர். நாம் கிரிக்கெட் உலகில் பலமான அணியாக விளங்கி வருகின்றோம். நாம் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகிறோம். எனவே அதையே நாம் பின்பற்றுவோம். கிரிக்கெட் உலகில் நாம் ஒரு சூப்பர் பவர் அதை மனதில் வைத்துக் கொண்டு முன்னேறி செல்வோம் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Sunday, September 21, 2025, 11:37 [IST]
Other articles published on Sep 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+