Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK : இவங்கள தூக்கிட்டா போதும்.. இந்தியாவுக்கு ஆபத்து தரக்கூடிய 5 பாகிஸ்தான் வீரர்கள்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுகிறது. டி20 கிரிக்கெட் போட்டிகளாக இந்த தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணிகள் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.

இதனால் இளம் வீரர்களைக் கொண்டே இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. அதேபோல் பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு குறிப்பிட்ட தகுந்த வெற்றியையும் இந்தியாவுக்கு எதிராக பெறவில்லை. மேலும் பாகிஸ்தான் டி20 அணி தற்போது நவீன கால கிரிக்கெட் ஏற்ற வகையில் விளையாடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Ind vs Pak

தற்போது இருக்கும் டி20 கிரிக்கெட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியில் இருந்த பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இன்னும் பழையபடி விளையாடி வந்ததால் தற்போது அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அபாரமாக விளையாடிய இளம் வீரர்களுக்கு அதிக அளவில் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அனுபவமும் திறமையான இளம் வீரர்களும் கலந்த கலவையாக பாகிஸ்தான் அணி உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் முன்னாள் ஆர் சி பி அணி பயிற்சியாளரான மைக் ஹேசன், தற்போது பாகிஸ்தான் அணியை பயிற்சியாளராக வழி நடத்துகிறார். இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆபத்து தரக்கூடிய பாகிஸ்தான் வீரர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரராக இருக்கும் ஷையும் அயூப் அந்நாட்டில் புதிய அதிரடி வீரராக உருவெடுத்து இருக்கிறார். இதனால் அவரை கட்டுப்படுத்துவது என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று பாகிஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த வீரராக பக்கர் சமான் உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக சில முக்கிய இன்னிங்ஸ்களையும் ஆடியிருக்கிறார்.

இதனால் இவருடைய விக்கெட்டை வீழ்த்துவது என்பது மிகவும் முக்கியமாகும். இதேபோன்று இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் பாகிஸ்தான் அணியில் கேப்டன் சல்மான் ஆகா. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஆல் ரவுண்டர் திறமையை கொண்ட சல்மான் ஆகா இந்தியாவுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள முகமது நவாஸ் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான இவர் அண்மைக்காலமாக பந்துவீச்சின் அபாரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த முத்தரப்பு போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு ஹாட்ரிக் உட்பட ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதை போன்று இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் ஷாகின் அப்ரிடி இருக்கின்றார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஷாகின் ஆப்ரிடி, இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே நன்றாக செயல் படக்கூடியவராக உள்ளார். அவருடைய இடதுகை வேகப்பந்து வீச்சை இந்திய அணி சமாளிக்க வேண்டும். இதைத் தவிர முகமது ஹாரிஸ், ஃபர்கான்,ஃபகிம் அஸரப் போன்ற வீரர்களும் பாகிஸ்தான் அணியின் பலத்தை கூட்டுகிறார்கள்.

Story first published: Sunday, September 14, 2025, 8:54 [IST]
Other articles published on Sep 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+