Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK : ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன?

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக இந்தியா பாகிஸ்தான் லீக் சுற்றில் மோதுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்திற்கு பிறகு இந்த போட்டி நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் சில தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் டி20 யிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் பாகிஸ்தானை இந்திய அணி இளம் வீரர்கள் எதிர்கொள்கின்றனர்.

Ind vs Pak

கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு விராட் கோலி அல்லது ரோகித் சர்மா இல்லாமல் பாகிஸ்தானை இந்திய அணி t20 போட்டிகளில் எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி தங்களுடைய பிளேயிங் லெவனை மாற்றுமா என கேள்வி எழுந்துள்ளது.

தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மாவும், சுப்மன் கில்லும் களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளது. மூன்றாவது வீரராக சஞ்சு சாம்சன் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. நான்காவது வீரராக சூரியகுமார் யாதவும், ஐந்தாவது வீரராக திலக் வர்மாவும் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதேபோன்று அதிரடி வீரர் சிவம் துபே ஆறாவது வீரராகவும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஏழாவது வீரராகவும் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் யூஎஇ அணிக்கு எதிரான முதலில் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பும்ரா என ஒரே ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே வைத்து களம் இறங்கியது.

ஆனால் பாகிஸ்தான் கொஞ்சம் பலமான அணி என்பதால் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் இடம் பெறுவாரா என்று கேள்வி எழுந்தது. ஆனால் இந்திய அணி சுழற் பந்துவீச்சை மையமாக வைத்தே இந்த போட்டியில் களமிறங்க முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி எட்டாவது இடத்தில் அக்சர் பட்டேல், ஒன்பதாவது இடத்தில் குல்தீப் யாதவ், பத்தாவது இடத்தில் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் களமிறங்க உள்ளனர். ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளராக பும்ரா விளையாட உள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் பணியை சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் செய்ய உள்ளனர்.

இந்திய அணி பிளேயிங் XI: 1, அபிஷேக் சர்மா, 2, சுப்மன் கில், 3, சஞ்சு சாம்சன், 4, சூர்யகுமார், 5, திலக் வர்மா, 6, சிவம் துபே, 7, ஹர்திக் பாண்டியா, 8, அக்சர் பட்டேல், 9, குல்தீப் யாதவ், 10. வருண் சக்கரவர்த்தி, 11. பும்ரா

Story first published: Sunday, September 14, 2025, 7:08 [IST]
Other articles published on Sep 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+