Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK : இந்தியா, பாகிஸ்தான் போட்டியை எந்த சேனல், ஒடிடியில் பார்ப்பது? நேரம் என்ன? ரத்தாகுமா ஆட்டம்?

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று குரூப் ஏ லீக் சுற்றில் பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த மே மாதத்திலிருந்து உறவுகள் பெரும் அளவு விரிசல் அடைந்திருக்கிறது.

போர் பதற்றம் காரணமாக இரு நாடுகளும் இனி எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க போவதில்லை என்ற முடிவை எடுத்தது. தற்போது அந்த நிலையிலிருந்து மாறி இந்திய அணி பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு மற்றும் இரு தரப்பு தொடர்களிலும் இனி விளையாட மாட்டோம் என்று முடிவை எடுத்திருக்கிறது.

Ind vs Pak

தற்போது இந்த போட்டி துபாயில் நடைபெறுவதால் பாகிஸ்தானை எதிர்கொள்ள மத்திய அரசு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுகிறது. ஆனால் இந்தப் போட்டியில் நடைபெறக்கூடாது என்று இந்திய ரசிகர்களில் ஒரு தரப்பினர் போர் கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் பாரதத்தாயை விமர்சிக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர் ஃபஹிம் அஷ்ரப் பதிவிட்ட கருத்தும் தற்போது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றி இருக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள பல தரப்பட்ட மக்களும் இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்திய வீரர்கள் பாகிஸ்தானை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் திட்டமிட்டபடி இரவு 8 மணிக்கு தொடங்கும் என தெரிகிறது. டாஸ் ஏழு முப்பது மணிக்கு போடப்படும். இந்தியா பாகிஸ்தான் அணிகள் இதுவரை 13 முறை சர்வதேச டி20 போட்டிகளில் மோதி இருக்கிறது. இதில் பத்து முறை இந்திய அணியும், மூன்று முறை பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த போட்டி சோனி டென் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். ஆன்லைனில் சோனி லைவ் ஆப்பில் போட்டிகளை பார்க்க முடியும். இல்லை என்றால் பேன் கோடு ஆப்பிலும் இந்த போட்டிகளை பார்க்கலாம். கடைசியாக இரு அணிகளும் டி20 போட்டியில், 2024 டி20 உலக கோப்பையில் மோதியது. இதில் இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பாகிஸ்தான் அதனை கூட எட்ட முடியாமல் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Story first published: Sunday, September 14, 2025, 7:39 [IST]
Other articles published on Sep 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+