Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: வாய் சவடால் விட்ட பாகிஸ்தான் கேப்டன்.. கதறவிட்ட இந்திய வீரர்கள்.. என்ன நடந்தது?

துபாய்: இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்குதலில் சிக்கித் தவித்த நிலையில், அந்த அணியின் கேப்டன் சல்மான் அகாவின் ஆட்டம் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. அதிரடி வீரர் ஃபக்கர் ஜமான் ஆட்டமிழந்த பிறகு, அணிக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய கேப்டனே, பதற்றம் காரணமாக 12 பந்துகளைச் சந்தித்து வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது, பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்தப் போட்டிக்கு முன் இந்திய அணியை வீழ்த்துவோம் என்ற ரீதியில் பேசி இருந்தார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா. ஆனால், அவரது பேட்டிங்கே படுமோசமாக அமைந்தது. இந்தப் போட்டியில் பவர்பிளேயில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த, மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினர்.

IND vs PAK Asia Cup Pakistan Captain Salman Agha Crumbles in Indian Spin Attack

குறிப்பாக, அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டனர். அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஃபக்கர் ஜமானை (17 ரன்கள்), 8-வது ஓவரில் அக்சர் படேல் வீழ்த்தியபோது, பாகிஸ்தானின் ரன்ரேட் சரியத் தொடங்கியது.

கேப்டனின் பொறுப்பற்ற ஆட்டம்:

ஃபக்கர் ஜமானுக்குப் பிறகு களமிறங்கிய கேப்டன் சல்மான் அகா, அணியைச் சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் களத்தில் இருந்த ஒவ்வொரு நொடியும் பதற்றத்துடனேயே காணப்பட்டார். வருண் சக்கரவர்த்தியின் கூக்ளியை கணிக்க முடியாமல் திணறினார்; ஒரு எல்.பி.டபிள்யூ அப்பீலில் இருந்து நூலிழையில் தப்பித்தார். அக்சர் படேலின் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று ஏமாந்தார்.

அவரது பேட்டிங்கில் எந்தவிதமான உத்வேகமும் இல்லை. அவர் சந்தித்த 12 பந்துகளில், அவரால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இறுதியாக, 10-வது ஓவரில் அக்சர் படேல் வீசிய பந்தை, மீண்டும் ஒருமுறை ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று, பந்து டாப்-எட்ஜாகி, ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த அபிஷேக் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அழுத்தத்தில் காலியான பாகிஸ்தான்

போட்டிக்கு முன்னதாக, "எந்த அணியையும் வீழ்த்தும் திறன் எங்களிடம் உள்ளது" என்று சவால் விட்டிருந்த சல்மான் அகாவின் இந்த ஆட்டம், இந்திய பந்துவீச்சின் அழுத்தத்தை பாகிஸ்தான் அணியால் தாங்க முடியவில்லை என்பதை வெளிப்படையாக காட்டியது. 12 பந்துகளில் வெறும் 3 ரன்கள் என்பது, ஒரு கேப்டனுக்குரிய ஆட்டம் அல்ல.

10 ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. பின்னர் குல்தீப் யாதவ் தான் வீசிய 13 வது ஓவரில் 2 விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி பாகிஸ்தான் அணியை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கினார்.

Story first published: Sunday, September 14, 2025, 21:23 [IST]
Other articles published on Sep 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+