Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: மழை பெய்ய வேண்டும் என பாகிஸ்தான் வீரர் வேண்டுதல்.. வாய்ப்பே இல்லை என கூறும் தமிழ்நாடு வெதர்மேன்

கொழும்பு: கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா. பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை மோதலுக்கு முன்னதாக மழை பெய்ய வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பசித் அலி பிரார்த்தனை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர் பிரேமதாசா மைதானத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன,

இது குறித்து பேசிய பாசித் அலி, "அல்லாஹ் மழை பொழிய வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை" என்று 'ஏ ஸ்போர்ட்ஸ்' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். இது ரசிகர்களின் உற்சாகத்தைக் குறைத்தாலும், போட்டியின் முடிவில் வானிலை தலையிட வேண்டும் என தான் விரும்புவதாகவும், "எனக்கு மழை வர வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனையடுத்து இந்திய ரசிகர்கள் பலரும், மழை வந்து பாகிஸ்தானை காப்பாற்ற வேண்டும் என்று பாசித் அலி நினைக்கிறாரா என்று கிண்டல் செய்து வருகின்றனர். போட்டி தொடங்குவதற்கு முன்பே, தோல்வியை ஓப்பு கொண்டது போல் பாசித் அலி பேச்சு இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை வானிலை ஆய்வு மையம், வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கொழும்பின் கெத்தரமா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 70% வரை மழை வர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆர் பிரேமதாசா மைதானம் முழுமையாக வடிக்கால் வசதி செய்யப்பட்டுள்ளது. . இதனால் மழை நின்ற 20 நிமிடங்களுக்குள் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியும். இதனிடையே, தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், மழைக்கான வாய்ப்பு 10 சதவீதம் வரை ழுறைந்துவிட்டதாகவும், மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கூறினார். இப்படி பெய்தாலும்,அது லேசான மழையாக இருக்கும் என்பதால், போட்டி மீண்டும் தொடங்கும். இதனால் ஓவர்கள் ஏதும் குறைக்கப்படாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Story first published: Sunday, February 15, 2026, 11:28 [IST]
Other articles published on Feb 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+