Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்புட்றா.. லெக் ஸ்டம்ப் லைனில் தானே வந்துச்சு.. உறைந்துபோன சுப்மன் கில்.. மேஜிக் செய்த பாகிஸ்தான்!

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில் யாரும் எதிர்பாராத வகையில் அப்ரார் அஹ்மத் வீசிய மேஜிக் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென லெக் ஸ்டம்ப் லைனில் பிட்சான பந்து, சுப்மன் கில்லின் ஆஃப் ஸ்டம்பை தகர்த்து சென்றது.

இந்திய அணியின் துணைக் கேப்டனாக பொறுப்பேற்ற பின் இளம் வீரர் சுப்மன் கில்லின் ஆட்டம் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்களை விளாசிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதே ஃபார்மை தொடர்ந்து வருகிறார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதம் விளாசி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

ind vs pak Shubman Gill champions trophy 2025 2025 vs

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக சக்கீல் 76 பந்துகளில் 62 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரோஹித் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சுப்மன் கில் - விராட் கோலி கூட்டணி இணைந்தது. ரோஹித் சர்மா வெளியேறிய பின் உடனடியாக பொறுப்பை எடுத்து கொண்ட சுப்மன் கில், பவுண்டரிகளாக பொளந்து கட்டினார். அதில் ஷாகின் அப்ரிடி பவுலிங்கில் மட்டும் 5 பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.

அது விராட் கோலி செட்டிலாவதற்கு உதவியாக அமைந்தது. இதன்பின் எந்தவித பதற்றமும் இல்லாமல் எளிதாக இருவரும் ஒவ்வொரு ரன்களாக எடுக்க தொடங்கினர். இதனால் 17.1 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. அப்போது சுப்மன் கில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அரைசதம் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்ரார் அஹ்மத் வீசிய பந்தில் யாரும் எதிர்பாராத வகையில் போல்டாகி வெளியேறினார். அந்த பந்து லெக் ஸ்டம்ப் லைனில் பிட்சாகி சுப்மன் கில்லின் ஆஃப் ஸ்டம்பை தகர்த்தது. ஒரு நொடி என்ன நடந்தது என்பது தெரியாமல் சுப்மன் கில் பிட்சை பார்த்தார். சரியாக ஆஃப் ஸ்டம்பின் பைல்ஸை தூக்கியது ஆச்சரியத்தையும் கொடுத்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணி ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தது.

Story first published: Sunday, February 23, 2025, 20:26 [IST]
Other articles published on Feb 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+