For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இம்ரான் கானை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா? பாக். கேப்டனை விளாசும் ரசிகர்கள்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி!

மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த உலகக்கோப்பை போட்டி என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான். அந்தப் போட்டியில் மொத்தமாக சொதப்பிய பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொன்ன அறிவுரையை, பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது பின்பற்றவில்லை. அது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என விளாசி வருகிறார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள்.

இம்ரான் கான் அறிவுரை

இம்ரான் கான் அறிவுரை

இந்தப் போட்டிக்கு முன் இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை கூறி இருந்தார். அந்த அறிவுரையில், ஒரு இடத்தில் போட்டிக்கு முன் மழையால் ஆடுகளம் பாதிக்கப்படாத பட்சத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும் என கூறி இருந்தார். அதை அப்படியே தூக்கி வீசி விட்டு டாஸ் முடிவை எடுத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன்.

கேப்டன் எடுத்த முடிவு

கேப்டன் எடுத்த முடிவு

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது டாஸ் வென்ற பின் நேரடியாக பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என கூறினார். ஆனால், நடந்தது வேறு.

சொதப்பல்

சொதப்பல்

பாகிஸ்தான் பந்துவீச்சு படு மோசமாக அமைந்தது. ஹசன் அலி மிக தவறான லென்த்தில் பந்து வீசி ரன்களை வாரி இறைத்தார். ஆமிர் நன்றாக பந்து வீசினாலும், அவரால் துவக்கத்தில் விக்கெட் எடுக்க முடியவில்லை. ஆக, பாகிஸ்தான் திட்டம் சொதப்பியது.

சேஸிங் படுமோசம்

சேஸிங் படுமோசம்

இந்தியா 336 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் அணி சேஸிங்கிலும் சொதப்பியது. ஓவருக்கு 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதை மறந்து ஆடிய பாக்கர் சமான், பாபர் ஆசாம் ஜோடி கூட்டணியாக 104 ரன்கள் குவித்தும் பயனில்லாமல் போனது.

இம்ரான் கான் பேச்சை கேட்கலை

இம்ரான் கான் பேச்சை கேட்கலை

பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு பாகிஸ்தான் கேப்டன் டாஸ் வென்றவுடன் பேட்டிங் தேர்வு செய்யாதது தான் காரணம் என பரவலாக குற்றம் சாட்டி வருகிறார்கள் ரசிகர்கள். சிலர் பாகிஸ்தான் அணியை கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

காமெடி பீஸ்

இம்ரான் கான் : பேட்டிங் தேர்வு செய்

சர்பராஸ் : பந்துவீச்சை தேர்வு செய்தேன்

இம்ரான் கான் : என்னை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி இருக்கா?

உதை இருக்கு

இம்ரான் கான் அவ்வளவு சொல்லியும், சர்பராஸ் பவுலிங் எடுத்திருக்காருன்னா.. அப்ப ஊருக்கு போனா செம உதை இருக்கு!

Story first published: Monday, June 17, 2019, 0:50 [IST]
Other articles published on Jun 17, 2019
English summary
IND vs PAK Cricket World cup 2019 : Fans not happy as Imran Khan advice ignored
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+