தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட விராட் கோலி.. ரசிகர்கள் பேரதிர்ச்சி! #INDvsPAK
Recommended Video
மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பல சுவாரசியங்கள், சீண்டல்கள் என ஏதாவது ஒரு விஷயம் நமக்கு கிடைக்கும்.
ஆனால், 2019 உலகக்கோப்பை லீக் போட்டியில், விராட் கோலி செய்த மகா சொதப்பல் ஒன்று தான் தான் பெரிய செய்தியாக மாறி இருக்கிறது.
தான் அவுட்டே ஆகாத நிலையில், அவுட் ஆனதாக தனக்கு தானே நினைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார் விராட் கோலி. இதைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நல்லவேளையாக இந்த நிகழ்வு இந்திய அணியை பெரிய அளவில் பாதிக்கவில்லை.

என்ன நடந்தது?
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 140 ரன்களும், ராகுல் 57 ரன்களும் குவித்தனர். அடுத்து விராட் கோலி எப்போதும் போல சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து ஆடி வந்தார்.

கோலி என்ன செய்தார்?
கடைசி இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையில், முஹம்மது ஆமிர் பந்தில், விக்கெட் கீப்பர் பிடித்த கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார் கோலி. அம்பயர் அவுட் கொடுக்கும் முன்பே, தன் பேட்டில் பந்து உரசிச் சென்ற சப்தம் கேட்டதாக நினைத்து, வெளியேறினார் கோலி.

ரசிகர்கள் அதிர்ச்சி
அதன் பின் தான் அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால், ரீப்ளேவில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெரிந்தது. இதைக் கண்ட ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ரசிகர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர். நல்ல வேளையாக இந்த நிகழ்வு கடைசி 2 ஓவர்கள் மீதமிருக்கும் போது நடந்தது. 20வது ஓவர், 30வது ஓவரில் நடந்திருந்தால்.. போட்டியே மாறி இருக்கும்.

ஒன்றும் புரியவில்லை
விராட் கோலிக்கே ஒன்றும் புரியவில்லை. அவர் உடை மாற்றும் அறையில், தான் அவுட் ஆன அந்த பந்து பேட்டை கடந்த போது, தன் பேட்டில் ஏதோ சப்தம் வந்ததே.. என பேட்டை சோதனை செய்து கொண்டிருந்தார் கோலி.
கோலி விக்கெட் எடுக்க..
ரசிகர்கள் தங்கள் அதிர்ச்சியை பல்வேறு வகையில் ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர். விராட் கோலி விக்கெட்டை எடுக்க விராட் கோலியால் மட்டும் தான் முடியும் என அவரது அதிக பிரசங்கித்தனத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.
எல்லாம் நட்பு
கோலி, முஹம்மது ஆமிரிடம் கொண்ட நட்பினால் ஆட்டமிழக்காமல் வெளியேறினார் என மோசமாக கலாய்த்துள்ளார்.
அம்பயர் கிட்ட விடுங்க!
நாமளே முடிவு எடுக்காம இதை எல்லாம் அம்பயர் கிட்ட விட்டுடனும்.. இல்லைனா பெரிய ஆப்பு தான்.. என்கிறார்.


Click it and Unblock the Notifications