Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றால்.. அதுக்கு இது தான் காரணமா இருக்கும்! அந்த ஒரு வீக்னஸ் என்ன? #INDvsPAK

மான்செஸ்டர் : இந்திய அணியில் உள்ள ஒரு பலவீனத்தை தான் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி குறி வைக்கும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை லீக் போட்டி எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரம்மாண்டமாக களை கட்டத் துவங்கி உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்ப்பு முன் எப்போதையும் விட அதிகமாக உள்ளது.

ஒரே நம்பிக்கை

ஒரே நம்பிக்கை

இந்திய அணி தான் வெல்லும் என்பதே பொதுவான எண்ணமாக உள்ளது. பாகிஸ்தான் ரசிகர்கள் கூட பாகிஸ்தான் அணி தான் வெல்லும் என உறுதியாக சொல்ல முடியாமல் தான் உள்ளனர். ஆனால், இந்திய அணியின் அந்த ஒரு பலவீனம் மட்டுமே அவர்களின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.

பலவீனம்

பலவீனம்

அந்த பலவீனம் - இந்திய அணியின் மிடில் ஆர்டர். அதுக்கு என்ன குறைச்சல்? தோனி இருக்கார்.. ஜாதவ், ஹர்திக் பண்டியா இருக்காங்க.. தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் ஷங்கர் நான்காம் வரிசையில் இறங்குவாங்க.. அப்புறம் என்ன பலவீனம்?

வாய்ப்பு

வாய்ப்பு

இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகச் சில போட்டிகளில் தான் முழுமையாக அல்லது அதிக ஓவர்கள் பேட்டிங் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளது. கடந்த சில போட்டிகளில், இந்திய அணியின் டாப் ஆர்டரில் இருந்த தவான், ரோஹித், கோலியை மீறி மிடில் ஆர்டர் வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பே அதிகம் கிடைக்கவில்லை.

மிடில் ஆர்டர் எப்படி?

மிடில் ஆர்டர் எப்படி?

தோனி சிறப்பாக ஆடுவார். அவர் பத்தில், ஏழு போட்டிகளில் ரன் குவித்து அணிக்கு உதவுவார். ஆனால், இதே போல சராசரி வைத்துப் பார்த்தால், ஜாதவ், ஹர்திக் பண்டியா, விஜய் ஷங்கர் எல்லாம் எப்போது, எத்தனை முறை சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என விரல் விட்டு எண்ண வேண்டிய நிலைமை தான்.

திட்டம் இதுதான்

திட்டம் இதுதான்

இது தான், இந்திய அணியின் பலவீனம். இதைத் தான் பாகிஸ்தான் குறி வைக்கப் போகிறது. பாகிஸ்தான் அணியின் திட்டம் இதுவாகத் தான் இருக்கும். இந்திய டாப் ஆர்டரை 20 ஓவர்களுக்குள் வீழ்த்த வேண்டும். ரோஹித், ராகுல், கோலி மூவரின் விக்கெட்களையும் எடுத்து விட்டால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் 30 ஓவர்களை தாக்குப் பிடித்து ஆட வேண்டும்.

குறி வைக்கும்

குறி வைக்கும்

அப்படி ஒரு சூழ்நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றால், தோனியை தவிர மற்ற பேட்ஸ்மேன்களை குறி வைக்கும் பாகிஸ்தான். அதன் மூலம் இந்திய அணியை பெரிய அளவு ரன் குவிப்பதில் இருந்து தடுக்கலாம். இந்தியா சேஸிங் செய்ய வேண்டிய நிலைமை வந்தால், பாகிஸ்தான் 270+ ஸ்கோர் அடித்து இருந்தால், இந்த மிடில் ஆர்டர் திட்டம் வேலை செய்யும்.

Story first published: Sunday, June 16, 2019, 0:33 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+