For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு டிவியை வைத்து பஞ்சாயத்தை கூட்டும் இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள்! #INDvsPAK

மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஒட்டி இரு தரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கியும், கேலி, கிண்டல் செய்தும் வருகின்றனர்.

குறிப்பாக, இரு தரப்பு ரசிகர்களும் ஒரு டிவியை வைத்து மாறி, மாறி கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி துவங்கும் முன்பே இரு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் தங்கள் அலப்பறையை தொடங்கி விட்டார்கள். மற்ற போட்டிகளுக்கு என்றால், போட்டிக்கு பின் ஆரம்பிக்கும் ரசிகர்கள், இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பதால் கொஞ்சம் முன்பே.. நேற்றே தங்கள் வேலையை தொடங்கி விட்டார்கள்.

ட்விட்டர் போர்

ட்விட்டர் போர்

எப்போதும் போல ட்விட்டர் தான் போர் புரிய சரியான களம் என்பதால், அங்கே #INDIAvsPAKISTAN என்ற பெயரில் கூடி வருகிறார்கள். அதில் பலரும் தங்கள் நாட்டை பற்றி புகழ்ந்தும், வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியும் வருகிறார்கள்.

வைரல் ஆன டிவி

வைரல் ஆன டிவி

இடை இடையே அந்த டிவி போட்டியை பார்க்க முடிகிறது. முன்பு ஒரு முறை பாகிஸ்தான் நாட்டில், ஒரு கடையில் வெளியே வைக்கப்பட்டிருந்த டிவியை, இரும்புக் கம்பிகளுக்குள் வைத்து பூட்டப்பட்ட புகைப்படம் வைரல் ஆனது.

அந்த டிவி

அந்த டிவி

ஒவ்வொரு முறை இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கும் போதும் அந்த பூட்டப்பட்ட டிவியை வைத்து மீம்ஸ் போட்டு பாகிஸ்தான் ரசிகர்களை கலாய்த்து வருகிறார்கள் இந்திய ரசிகர்கள்.

தோல்வி?

இந்த முறை பாகிஸ்தான் அணி தோல்வி அடையவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்திய ரசிகர்கள், பாகிஸ்தான் நாட்டில் இன்று நிறைய டிவி உடையும் என்பதால், அதை பத்திரப்படுத்தி வைக்கும் வேலைகளை செய்து வருகிறார்கள் என கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

உல்டா மீம்ஸ்

சில உஷார் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள், இந்தியாவில் தான் இப்படி நடப்பதாக அப்படியே உல்டா அடித்தும் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். ஆக, மொத்தத்தில் ஒரே டிவியை வைத்து இரண்டு நாட்டு ரசிகர்களும் அலப்பறையை கூட்டி வருகிறார்கள்.

பாகிஸ்தான் தீவிரம்

பாகிஸ்தான் தீவிரம்

உண்மையில், பாகிஸ்தான் அணி மற்றும் அந்த நாட்டு ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய அணி இதுவும் மற்றுமொரு போட்டி என எடுத்துக் கொண்டு ஆட உள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

அதனால், இந்திய ரசிகர்கள் இடையே, போட்டிக்கு முன்பு பெரிய பரபரப்பு இல்லை. போட்டி துவங்கிய உடன் தான் இந்திய ரசிகர்கள் இணையத்தில் அள்ளு கிளப்புவார்கள். என்ன செய்யப் போகிறார்கள் என பார்க்கலாம்.

Story first published: Sunday, June 16, 2019, 13:43 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
IND vs PAK Cricket World cup 2019 : Indian fans troll Pakistan TV may get broken
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+