For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவரெல்லாம் ஒரு கேப்டனா? திட்டித் தீர்த்த ரசிகர்கள்.. பாக். கேப்டன் செய்த அந்த காரியம்!! #INDvsPAK

மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் பரபரப்புக்கு நடுவே பாகிஸ்தான் கேப்டனின் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை அவர் மீது பாகிஸ்தான் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி மிக மோசமாக பந்துவீசி வந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் செய்த செயல் மேலும் கோபத்தை கிளறி விட்டது.

இந்தியா அதிரடி

இந்தியா அதிரடி

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, இந்திய பேட்டிங் ஆடி வந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து கட்டியது இந்தியா. ரோஹித் 140, ராகுல் 57, கோலி 77 ரன்கள் குவித்தனர். இந்த நிலையில், மழை வந்தது.

மழை வந்தது

மழை வந்தது

46.வது ஓவரின் நான்காவது பந்து வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டது. அப்போது இந்தியா 305 ரன்களை கடந்து இருந்தது. இன்னும் 3 ஓவர்களில் 330 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தொடங்கிய போட்டி

தொடங்கிய போட்டி

பாகிஸ்தான் எப்படி சேஸிங் செய்யப் போகிறார்கள் என்ற பரபரப்பு அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில், தான் அந்த அற்புத காரியத்தை செய்து, பாகிஸ்தான் ரசிகர்களை சூடேற்றி விட்டார் சர்பராஸ் அஹ்மது.

கொட்டாவி விட்ட கேப்டன்

கொட்டாவி விட்ட கேப்டன்

சரியாக இரண்டு அணிகளும் மீண்டும் களமிறங்க தயாரான போது, கொட்டாவி விட்டுக் கொண்டு இருந்தார். இதை சரியாக டிவியில் ஒளிபரப்பி விட்டார்கள். அதைக் கண்டு பாகிஸ்தான் ரசிகர்கள் கொதித்துப் போனார்கள். பாகிஸ்தான் ஆடிய லட்சணத்துக்கு.. எப்படி சேஸிங் செய்யலாம் என திட்டமிடாமல், இவர் கிடைத்த கேப்பில் தூங்கி வழிகிறாரே.. என கோபம் கொண்டார்கள்.

பாகிஸ்தான் பந்துவீச்சு

பாகிஸ்தான் பந்துவீச்சு

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. ஆமிர், இமாத் வாசிம் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 7 ரன்களுக்கும் மேல் வாரி இறைத்தனர்.

தவறான முடிவு

தவறான முடிவு

இதற்கு முக்கிய காரணமாக அனைவரும் சொல்வது டாஸ் வென்றவுடன் சர்பராஸ் கான் பந்துவீச்சை தேர்வு செய்தது தான் என்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் போட்டிக்கு முன் மழை இல்லாத பட்சத்தில் டாஸ் வென்ற உடன் பேட்டிங் தேர்வு செய்யுமாறு அறிவுரை கூறிய நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார் சர்பராஸ் அஹ்மது.

வேட்டு இருக்கு!!

இந்தியா 50 ஓவர்களில் 336 ரன்கள் குவித்த நிலையில், பாகிஸ்தான் எப்படியும் சேஸிங் செய்து என்ற முடிவில் இருக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள், சர்பராஸ் அஹ்மது தங்கள் நாட்டுக்கு வந்தவுடன் இம்ரான் கானிடம் செமையாக வாங்கி கட்டிக் கொள்ளப் போகிறார் என கூறி வருகிறார்கள்.

Story first published: Sunday, June 16, 2019, 21:41 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
IND vs PAK Cricket World cup 2019 : Pakistan Captain Sarfaraz Khan yawning after rain break
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+