Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பர்கரும், ஐஸ்க்ரீமும் தின்று.. போட்டியில் கொட்டாவி விட்டு.. தூங்கி வழிந்த பாக். கேப்டன்!! #INDvsPAK

மான்செஸ்டர்: உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பாகிஸ்தான் கேப்டன் தின்ற நான்கு பர்கர் மற்றும் ஐஸ்க்ரீம் தான் காரணம் என சில ரசிகர்கள் இணையத்தில் புகார் கூறி வருகிறார்கள். (உண்மையாகவே...!)

இந்திய அணியில் ரோஹித் சர்மா 140, ராகுல் 57, விராட் கோலி 77 ரன்களும் அடிக்க, பாகிஸ்தான் அணி செய்வதறியாது நின்று கொண்டு இருந்தது.

மோசமான முடிவுகள்

மோசமான முடிவுகள்

அவர்களின் பந்துவீச்சு படு மோசமாக இருந்தது. என்ன திட்டத்தோடு களமிறங்கினார்கள் என்றே புரியாத அளவு இருந்தது அவர்களின் ஆட்டம். பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது மிக மோசமான முடிவுகளை எடுத்தார். ரசிகர்களின் கடும் கோபத்துக்கும் ஆளானார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்தப் போட்டிக்கு முன் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம் இதுதான். போட்டிக்கு முந்தைய நாள் இரவு, ஷோயப் மாலிக் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் சிலர் நள்ளிரவில் உணவகம் ஒன்றிற்கு சென்று ஷீசா எனப்படும் போதை வஸ்து பயன்படுத்தி புகைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

புகை

புகை

அந்த காட்சியை சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். ஷீசா பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளில் வழக்கத்தில் உள்ள, புகையிலை பொருள் தான். ஆனால், அதை போட்டிக்கு முந்தைய நாள் பயன்படுத்திக் கொண்டு சாவகாசமாக இருந்தது தான் பாகிஸ்தான் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

அந்த நாலு பர்கர்

அந்த நாலு பர்கர்

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது மற்றும் சில வீரர்கள் போட்டிக்கு முந்தைய தினம், அமெரிக்க உணவகம் ஒன்றிற்கு சென்று பர்கர், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்ற காட்சிகளும் இணையத்தில் பகிரப்பட்டது.

கொட்டாவி விட்டார்

சில ரசிகர்கள், சர்பராஸ் அஹ்மது நான்கு பர்கர் வாங்கிச் சென்றார். அதை உண்டு விட்டு மறுநாள் போட்டியில் தூங்கி வழிந்தார். மழை குறுக்கிட்டு போட்டி மீண்டும் தொடங்கிய போது சர்ப்ராஸ் கொட்டாவி விட்டதற்கும் இது தான் காரணம் என வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

கடும் கோபம்

கடும் கோபம்

பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் போராடி தோல்வி அடைந்திருந்தால் கூட ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். ஆனால், போட்டிக்கு முன் பயிற்சிகளில் ஈடுபடாமல், பொறுப்பில்லாமல் இருந்து விட்டு, திட்டங்களை எல்லாம் சொதப்பி, படு தோல்வி அடைந்ததை தான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Story first published: Monday, June 17, 2019, 18:42 [IST]
Other articles published on Jun 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+