For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடக் கொடுமையே! போட்டியை பற்றி தேடுனதை விட.. இதைப் பற்றி தேடுனது தான் அதிகம்!! #INDvsPAK

Recommended Video

WORLD CUP 2019 IND vs PAK | கடைசி நேர விளம்பரத்துக்கு “யானை” விலையாம்!

மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி உலகம் முழுவதிலும் இருந்து 100 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், கூகுளில் இந்தப் போட்டி குறித்து மக்கள் என்ன தேடி இருப்பார்கள் என பார்த்தால், எந்த கிரிக்கெட் போட்டிக்கும் தேடாத ஒன்றை குறித்து தேடி வருகிறார்கள். அது என்ன?

உலகக்கோப்பையில் மழை

உலகக்கோப்பையில் மழை

2019 உலகக்கோப்பை தொடரில் மழையால் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பும் அதை குறித்து தான் மக்கள் அதிகம் தேடி இருக்கிறார்கள். இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

இந்தியா - நியூசிலாந்து

இந்தியா - நியூசிலாந்து

அதில் பாகிஸ்தான் போட்டிக்கு, முன் இந்தியா ஆட இருந்த நியூசிலாந்து போட்டியும் அடக்கம். இந்தியா - நியூசிலாந்து போட்டியில் டாஸ் கூட போடப்படாத நிலையில், கைவிடப்பட்டது. அதனால், இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கவலை

கவலை

அந்தப் போட்டி கைவிடப்பட்ட போதே இந்திய ரசிகர்கள், பாகிஸ்தான் போட்டிக்கும் மழை வரும் ஆபத்து இருப்பது சுட்டிக் காட்டி கவலைப்பட்டனர். அந்த தகவல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பரவியது.

கூகுள் தேடல்

இரு நாட்டு ரசிகர்களும் கூகுளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ள மான்செஸ்டர் நகரின் வானிலை அறிக்கையை "Manchester weather" என்ற இடுசொல் மூலம் தேடி உள்ளனர். கடந்த வாரத்தில் இது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

போட்டியை விட

போட்டியை விட

இது இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்த இடுசொற்களை விட அதிக தேடல் பெற்றதாக தெரிகிறது. அதாவது, இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்த தேடல்களில் மான்செஸ்டர் வானிலை தான் முதல் இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம்.

மழை குறுக்கீடு

மழை குறுக்கீடு

ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மழை பெய்தது. இந்தியா பேட்டிங் ஆடி வந்த போது 47வது ஓவரில் சில நிமிடங்கள் மட்டுமே மழை பெய்து, பின் நின்றது. பின் போட்டி ஓவர்கள் குறைக்கப்படாமல் தொடங்கியது.

Story first published: Sunday, June 16, 2019, 19:18 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
IND vs PAK Cricket World cup 2019 : People searching for Manchester weather
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+