Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரதமர் இம்ரான் கான் பேச்சை மதிக்காத பாக். கேப்டன்.. தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டாரே!

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் அணிக்கும், கேப்டன் சர்பராஸ் அஹ்மதுக்கும் அறிவுரை கூறி இருந்தார்.

அந்த அறிவுரையை தூக்கி எறிந்து விட்டு, டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தார் கேப்டன் சர்பராஸ் அஹ்மது.

இந்தியா பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை இந்தியாவை, பல மடங்கு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது பாகிஸ்தான். அந்த நாட்டின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான். உலகக்கோப்பை வென்று கொடுத்த கிரிக்கெட் கேப்டன் என்பதும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

இம்ரான் கான் அறிவுரை

இம்ரான் கான் அறிவுரை

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தினத்தன்று இம்ரான் கான் தங்கள் அணிக்கு சில அறிவுரைகள் கூறி இருந்தார். அதில் குறிப்பாக பாகிஸ்தான் கேப்டனுக்கு ஒரு யோசனை கூறி இருந்தார். இதை செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறி இருந்தார்.

என்ன யோசனை?

ஆடுகளம் ஈரமாக இல்லாத பட்சத்தில் பாகிஸ்தான் கேப்டன் டாஸ் வென்றால், நேரடியாக பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். அதாவது, போட்டிக்கு முன் மழை வராமல் இருந்தால், முதலில் பேட்டிங் செய்வதே நல்லது என்று கூறி இருந்தார்.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

ஆனால், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் நேரடியாக பந்துவீச்சை தேர்வு செய்து, இம்ரான் கான் அறிவுரையை தூக்கி எறிந்தார். ஆடுகளம் காய்ந்து இருப்பதாகவே போட்டிக்கு முன் முன்னாள் வீரர்கள் கூறி இருந்தனர்.

சரியான முடிவா?

சரியான முடிவா?

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதே போன்ற சூழலில் முதலில் பந்துவீசி, அந்தப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது. இருந்தாலும், மீண்டும் அதே முயற்சியை செய்கிறது. ஆனால், இந்த ஆடுகளத்தில், இந்த சூழ்நிலையில் அவர் எடுத்த முடிவு சரிதான் என்கிறார்கள். விராட் கோலி டாஸ் தோற்ற உடன் தானும் முதலில் பந்துவீசவே ஆசைப்பட்டதாக கூறினார்.

அழுத்தம் யாருக்கு?

அழுத்தம் யாருக்கு?

ஆனால், பாகிஸ்தான் அணி சேஸிங் அழுத்தத்தை தாங்காது என்பதே உண்மை. முதலில் பந்துவீசுவது அந்த அணிக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், இந்தியா 270+ ரன்களை குவித்து விட்டாலே, பாகிஸ்தான் அணி சேஸிங்கில் தடுமாறி விடும்.

Story first published: Sunday, June 16, 2019, 16:04 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+