Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏற்கனவே 4 அவுட்.. நாளைக்கும் மழை வந்தால்.. தலையில் துண்டு தான்.. பரபரப்பான சூழலில் #INDvsPAK!

மான்செஸ்டர் : உலகக்கோப்பை தொடரில் பரபரப்பான சூழலில் இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி நடைபெற உள்ளது.

ஏற்கனவே சில போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளின் போது மழை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்தப் போட்டியின் போது மழை குறுக்கிட்டால், பலத்த நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.

1௦௦ கோடிக்கும் மேல்!

1௦௦ கோடிக்கும் மேல்!

நஷ்டக் கணக்கு 1௦௦ கோடியை தாண்டும் என்பதால், உலகக்கோப்பை மூலம் வருமானம் ஈட்ட திட்டமிட்ட நிறுவனங்கள் பரபரப்பான சூழ்நிலையில், கையை பிசைந்து கொண்டு, மழை வரக் கூடாது என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

4 போட்டிகள் ரத்து

4 போட்டிகள் ரத்து

உலகக்கோப்பை தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு அந்த அணிகளுக்கு தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. அந்த நான்கில் ஒரு போட்டி இந்தியா - நியூசிலாந்து போட்டி ஆகும்.

100 கோடி இழப்பு

100 கோடி இழப்பு

உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு, இந்த நான்கு போட்டிகளில் மட்டும் 100 கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து போட்டியில் மட்டும் சுமார் 75 கோடி நஷ்டம்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்த சூழ்நிலையில் தான் மழைக்கு நடுவே இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு தான் மார்க்கெட் மதிப்பு அதிகம் என்பதால், இந்தப் போட்டியில் மட்டும் 137 கோடி வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பலத்த நஷ்டம்

பலத்த நஷ்டம்

ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 230 கோடிக்கும் மேல் நஷ்டம் ஆகும். இது ஒட்டு மொத்த வருமானத்தில் பெரிய பாதிப்பாக இருக்கும்.

மொத்தம் 1350 கோடி

மொத்தம் 1350 கோடி

2019 உலகக்கோப்பை தொடரின் மூலம் 1250 முதல் 1350 கோடி வரை வருமானம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் 230 கோடி நஷ்டம் என்பது சுமார் 20 சதவீத நஷ்டம் ஆகும். இதனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்படும்.

இன்சூரன்ஸ் உண்டா?

இன்சூரன்ஸ் உண்டா?

உலகக்கோப்பை தொடரின் ஒளிபரப்புக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. மழையால் போட்டி தடைபட்டால், அப்போது ஏற்படும் விளம்பர வருவாய் இழப்பை இன்சூரன்ஸ் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அப்புறம் என்ன பாதிப்பு?

பணம் கிடைப்பதில் சிக்கல்

பணம் கிடைப்பதில் சிக்கல்

இது போன்ற நஷ்டங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை உடனடியாக கிடைக்காது. பல ஆண்டுகள் ஆகும். சில சமயம் 10 ஆண்டுகள் கூட ஆகலாம் என கூறப்படுகிறது. அதுவரை இந்த நஷ்டத்தை ஈடு கட்ட முடியாது.

விளம்பரம்

விளம்பரம்

ஒளிபரப்பும் நிறுவனத்துக்கு இந்த நஷ்டம் என்றால், விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கும் சிக்கல் உண்டு. அவர்கள் தான் மழையால் கைவிடப்பட்ட போட்டிக்கு பணமே செலுத்த மாட்டார்களே.. என்று கேட்கலாம்.

விளம்பர நஷ்டம்

விளம்பர நஷ்டம்

உலகக்கோப்பையை மனதில் வைத்து எடுக்கப்பட்ட விளம்பரங்களை அவர்களால் உலகக்கோப்பை தொடருக்கு பின் பயன்படுத்த முடியாது. அதனால், இந்தியா - பாகிஸ்தான் போன்ற முக்கியமான போட்டியில் அவர்கள் விளம்பரம் ஒளிபரப்பாகவில்லை என்றால், விளம்பரம் எடுக்க செலவு செய்யப்பட்ட தொகை நஷ்டக் கணக்கில் தான் சேரும்.

Story first published: Saturday, June 15, 2019, 14:20 [IST]
Other articles published on Jun 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+