Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால்... இந்தியாவை வீழ்த்தி இருக்குமா பாக்.? #INDvsPAK

மான்செஸ்டர் : உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் களத்தில் பாகிஸ்தான் அணி பல தவறுகளை செய்தது. அதுதான் தோல்விக்கும் முக்கிய காரணமாக இருந்தது.

பாகிஸ்தான் அணி இந்தியா நிர்ணயித்த ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் தடுமாறி தோல்வி அடைந்தது. ஒருவேளை பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங், ஆடி இந்தியா இரண்டாவதாக சேஸிங் செய்து இருந்தால்.. என்ன நடந்து இருக்கும்?

தோல்வி

தோல்வி

இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம், டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்ததே. பாகிஸ்தான் பிரதமரும், உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டனுமான இம்ரான் கான் டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்யுமாறு கூறினார். அதை மதிக்காமல், பந்துவீச்சை தேர்வு செய்தார் கேப்டன் சர்பராஸ் அஹ்மது. சில கிரிக்கெட் விமர்சகர்கள் அவர் எடுத்த முடிவு சரி தான் என கூறினார்கள்.

பேட்டிங் ஆடி இருந்தால்..

பேட்டிங் ஆடி இருந்தால்..

ஒருவேளை இம்ரான் கான் சொன்னது போல பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடி இருந்தால்.. இந்தியாவை வீழ்த்தி இருக்க முடியுமா? நிச்சயம் அதிக வாய்ப்பு கிடைத்திருக்கும். பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் ஆடி வருவதை வைத்தே நாம் இதை கூற முடியும். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து இருந்தால், இந்தியாவுக்கு இணையாக ஆடி இருக்க முடியும். வெற்றி, தோல்வி கடைசி சில ஓவர்களில் முடிவு செய்யப்பட்டு இருக்கும். எப்படி?

முந்தைய போட்டிகள்

முந்தைய போட்டிகள்

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்,வலுவான அணிகளாக கருதப்படும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை சந்தித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 348 ரன்கள் குவித்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சேஸிங் செய்த பாகிஸ்தான் அணி, ரன் ரேட் அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இணையாக இருக்கும் இந்திய அணிக்கு எதிராகவும் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து இருக்க வேண்டும். அப்படி பேட்டிங் செய்து இருந்தால், நிச்சயம் 300 ரன்களை கடந்து இருக்க முடியும்.

இந்தியா சேஸிங்

இந்தியா சேஸிங்

300 ரன்கள் என்பது எந்த அணிக்கும் கடினமான இலக்கு தான். வலுவான அணியான இங்கிலாந்து கூட பாகிஸ்தான் அணியிடம் சேஸிங் செய்ய முடியாமல் தோற்றது. இந்திய அணி சேஸிங்கில் தவறு செய்து இருந்தால், அங்கே இருந்து பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி இருக்க முடியும். ஆனால், நேற்றைய போட்டியில் எந்த இடத்திலும் பாகிஸ்தான் அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடி இருந்தால், குறைந்த பட்சம் இந்திய அணிக்கு இணையாக ஆடி இருக்க முடியும். அழுத்தம் கொடுத்து இருக்க முடியும்.

டாஸ் முடிவு தவறு

டாஸ் முடிவு தவறு

பாகிஸ்தான் அணி எடுத்த டாஸ் முடிவு தவறு என தற்போது பலராலும் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ரசிகர்கள் இம்ரான் கான் யோசனையை சர்பராஸ் புறக்கணித்ததை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Monday, June 17, 2019, 17:59 [IST]
Other articles published on Jun 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+