Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK : இவர் ஒருவர் போதும்.. பாகிஸ்தான் முக்கிய தலையை காலி செய்து விடுவார்.. இர்பான் பதான்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும் முக்கிய லீக் ஆட்டம் இன்று துபாயில் தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது. பாகிஸ்தான் அணியில் பல இளம் வீரர்கள் உள்ள நிலையில், ஃபக்ர் சமான், ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட சீனியர் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் பும்ரா, கில், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பலமான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த தருணத்தில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இர்பான் பதான், இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள். என தெரிவித்துள்ளார்.

Ind vs Pak

இது குறித்து பேசிய அவர், கடைசி ஆட்டத்தில் பும்ரா எவ்வாறு செயல்பட்டார் என்று நாம் பார்த்தோம். பந்தை கட்டுக்கோப்பாகவும், கில் பேசுகிறார். பும்ரா ஒரு புத்திசாலி இதனால் பந்தின் வேகத்தை எப்படி மாற்றுவது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடிய ஆட்டத்தை நாம் பார்த்திருக்கின்றோம். பாகிஸ்தான் அணியில் பக்கர் சாமான் மட்டும்தான் அதிரடியாக ஆடக்கூடியவர். அணியின் உத்வேகத்தை முன்னோக்கி கொண்டு செல்வார். ஆனால் பும்ராவுக்கு எதிராக அவர் தடுமாறுவார் என நினைக்கின்றேன்.ரன் குவிக்கும் வாய்ப்பு கொஞ்சம் கூட பக்கர் சமானுக்கு கிடையாது.

இதேபோன்று பக்கர் சமான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடையே உள்ள மோதலை பார்க்க நான் ஆவலுடன் இருக்கின்றேன்
பும்ராவுக்கு யாரும் அறிவுரை கூற தேவையில்லை. அவர் பவுலிங்கின் அரசர். இந்த தலைமுறை சிறந்த பவுலர். பேட்ஸ்மேன் எப்படி ஆட்டம் இழக்க வைக்க வேண்டும். எப்படி யாக்கர் வீச வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும்.

ஃபகர் சாமான் போன்ற இடது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக இன் ஸ்விங் யாக்கர்களை பும்ரா அபாரமாக வீசுவார் என்று தெரிவித்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கி வந்த ஃபகர் சமான், தற்போது பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ஓமன் எதிராக முதல் லீக் ஆட்டத்தில் பக்கர் சமான் 16 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பும்ராவை பொறுத்தவரை யு ஏ இ அணிக்கு எதிராக மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

Story first published: Sunday, September 14, 2025, 9:47 [IST]
Other articles published on Sep 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+