நியூயார்க் : இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் இந்திய அணி அசால்ட்டாக பாகிஸ்தான் அணியை சம்பவம் செய்தது. இதனை WWE பொழுதுபோக்கு விளையாட்டில் ஜான் சீனாவுக்கு ராக்-க்கும் இடையிலான போட்டி எப்படி இருக்குமோ அப்படி சோசியல் மீடியாவில் பில்டப் செய்ததாகவும், ஆனால் நிஜத்தில் 7 அடியில் இருக்கும் கிராட் காளிக்கும் 3 அடி இருக்கும் ஹார்ன்ஸ்வோக்குள் இடையிலான போட்டியாக இருந்ததாகவும், பாகிஸ்தானை கிரேட் காளி போல் இந்திய அணி பொளந்து கட்டியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ரா சக்க ரகம்.
சென்னை 28 இரண்டாம் பாகத்தில் "நம்ம டீம்-க்கு ஏன் தெரியுமா ஷார்க்ஸ்-னு பெயர் வந்துச்சு.. உனக்கு தெரியுமா.. உனக்கு தெரியுமா.. அவனுக்கு தெரியுமா.. ஏன் எனக்கே தெரியாது.." என்று நடிகர் சிவா காமெடியாக ஒரு எனர்ஜிட்டிக் ஸ்பீச்சை கொடுப்பார். இதனை நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களுடன் கேப்டன் ரோகித் சர்மா பேசிய புகைப்படத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.
திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷின் நண்பர் பெயர் யமஹா ராஜு என்பார். அதற்கு இன்ஸ்பெக்டர் யமஹா பைக் வச்சிருக்கியா என்று கேட்க, அதற்கு திருடுவான் சார் என்று பதில் வரும். அதனை அப்படியே மாற்றி பாகிஸ்தான் பவுலர்கள் சூர்யகுமார் யாதவை பார்த்து, "இவன்தான் 360 டிகிரி பேட்டரா டா? என்று கேட்க, அதற்கு இந்திய அணி, சார்.. 360 டிகிரி புரொட்ராக்டர் வைத்து ஜியாமிண்ட்ரி வரைவான் சார்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அமுக்கு டுமுக்கு அமால் டுமால் ரகம்.

சிவாஜி படத்தில் ரஜினிகாந்திடம், டிஐஜி-யாக இருக்கும் சுந்தர்ராஜன் பாஸ்வர்ட்டை சொல்லுடா என்று கேட்பார். அதற்கு ரஜினிகாந்த் மறந்துபோச்சு என்று ஜாலியாக பதில் அளிப்பார். நேற்றைய ஆட்டத்தில் ரிஸ்வான் கொடுத்த ஏளித கேட்சை சிவம் துபே கோட்டைவிடுவார். இதனை அபப்டியே சிவாஜி படத்துடன் ஒப்பிட்டு ரோகித் சர்மா, ஏன்டா கேட்ச் பிடிக்கலை என்று கேட்க, அதற்கு சிவம் துபே, இம்பேக்ட் பிளேயரா விளையாடியதால் ஃபீல்டிங் மறந்து போச்சு என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அல்டிமேட் காமெடி ரகம்.
