For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK: அடப்பாவி! கைக்கு வந்த கேட்சை கோட்டைவிட்ட அபிஷேக் சர்மா.. 0 ரன்னில் எஸ்கேப் ஆன பாக்.வீரர்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அபிஷேக் ஷர்மா கோட்டை விட்டது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும்.

அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் கூட பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியின் மூலம் நாட்டு ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள்.

Abhishek sharma

இதனால் இழந்த மானத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த தருணத்தில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான ஃபர்கான் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அபிஷேக் ஷர்மா கோட்டை விட்டது ரசிகர்களை கடுப்படைய செய்து இருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் 29 வயதான ஃபர்கான் அதிரடியாக விளையாடும் பழக்கத்தை கொண்டு இருக்கின்றார். கடந்த சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 40 ரன்கள் அவர் அடித்திருந்தார். இதனால் ஃபர்கானின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இந்தியா இருந்தபோது, அபிஷேக் ஷர்மா தேவையில்லாமல் ஒரு கேட்ச் வாய்ப்பை வீணடித்திருக்கிறார்.

அதுவும் ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தலாம் என ரசிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆட்டத்தையே மாற்றக்கூடிய கேட்சாக இது அமைந்து விடுமா? இல்லை பர்ஹான் விரைவில் ஆட்டம் இழந்து விடுவாரா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பலரும் அபிஷேக் ஷர்மா செய்த தவறை கடுமையாக சாடி வருகின்றனர். இது போன்று முக்கியமான ஆட்டத்தில் இப்படி தவறு செய்யலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் தனது கேட்ச் மிஸ் போட்டியில் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என தற்போது அபிஷேக் ஷர்மா பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்றும் கிண்டல் அடித்துள்ளனர்.

Story first published: Sunday, September 21, 2025, 20:42 [IST]
Other articles published on Sep 21, 2025
English summary
Ind vs Pak- Farhan dropped on o by Abhishek sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+