ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது, அத்துடன் விலை உயர்ந்த சொகுசு காரும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த சொகுசு காரின் விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்த கார் நமக்கு பரிசாக கிடைத்தது குறித்து பேசி அபிஷேக் ஷர்மா கார் பரிசாக கிடைத்தால் யாருக்கு தான் மகிழ்ச்சியாக இருக்காது என்று கூறினார்.

இந்த நிலையில் காருக்குள் இந்திய அணியின் தொடக்க வீரர்களான கில் மற்றும் அபிஷேக் ஷர்மா அமர்ந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காரில் அமர்ந்து கொண்டு இரண்டு வீரர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கார் உடைய மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 37 லட்சம் ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரை அபிஷேக் ஷர்மா எவ்வாறு இந்தியா கொண்டுவரப் போகிறார்? இதற்கு வரி கட்ட வேண்டுமா போன்ற கேள்விகள் எல்லாம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவும் சுப்மன் கில்லும் சிறுவயதில் இருந்து நண்பர்கள் இருவரும் அண்டர் 19 கிரிக்கெட்டில் ஒன்றாக தான் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் சுப்மன் கில் இணைந்தது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது. இருவரும் ஒன்றாக இணைந்து பயிற்சி செய்வது பேட்டிங் தவறு செய்தால் இன்னொருவர் சரி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது வெற்றியையும் அவர்கள் காரில் கொண்டாடியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த காரை மைதானத்திலேயே வைத்து இந்திய வீரர்கள் கொண்டாடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர் ஒருமுறை வெளிநாட்டில் பரிசாக கார் வாங்கிய போது அதில் வீரர்கள் அனைவரும் அமர்ந்து கொண்டு மைதானத்தில் கொண்டாடினார்கள். இதுபோன்று யுவராஜ், தோனியும் ஒரு முறை கொண்டாடிய காட்சிகளும் 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்காமல் இருக்கிறது.ஆனால் அப்படி எந்த ஒரு கொண்டாட்டமும் நடைபெறாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.