Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: ஆசிய கோப்பை 9வது முறையாக வென்ற இந்தியா! சோலியை முடித்த திலக் வர்மா! பாக். எதிராக ஹாட்ரிக் வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஒன்பதாவது முறையாக வென்று இந்தியா சாதனை படைத்திருக்கிறது. துபாயில் நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபர்கான் மற்றும் பக்கர் ஜமான் ஆகியோர் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர்.

இதில் பர்ஹான் 38 பந்துகளின் 57 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி மூன்று சிக்சர் அடங்கும். பர்கான் 35 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து களமிறங்கிய சையும் அயூப் 14 ரன்களிலும் முகமது ஹாரிஸ் டக்அவுட் ஆகியும் கேப்டன் சல்மான் 8 ரன்களிலும் வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 19 புள்ளி ஒரு ஓவரில் 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Ind vs Pak Final

இந்திய அணியில் குல்தீப் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. ஹாட்ரிக் அரைசதத்தை அடித்த அபிஷேக் ஷர்மா ஐந்து ரன்களிலும் கேப்டன் சூரியகுமார் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் 10 பந்துகளை மட்டுமே எதிர் கொண்டு 12 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் சாம்சன் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார் ஆட்டமிழந்த போது இந்தியா 77 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதனை அடுத்து ஆட்டம் பரபரப்பான நிலையில் இருந்த போது களத்திற்கு வந்த திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடி காட்டினார் குறிப்பாக ஆட்டத்தின் 15 வது ஓவரில் இந்திய வீரர்கள் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என 17 ரன்கள் எடுத்தனர். அதேபோன்று 16வது ஓவரிலும் இந்திய வீரர்கள் 11 எடுத்தனர். இதனால் ஆட்டம் தலைக்கீழ் மாறியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திலக் வர்மா சிக்சஙா அடித்து அசத்தினார். இதன் மூலம் 2 பந்துகள் எஞ்சிய நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதனையடுத்து 9வது முறையாக ஆசிய கோப்பையை இந்தியா வென்றது. திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார்.

Story first published: Sunday, September 28, 2025, 23:52 [IST]
Other articles published on Sep 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+