For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK: இந்திய அணியில் இருந்த ஒரே குறையும் சரியானது.. பைனலுக்கு முன் பலத்தை கூட்டிய கம்பீர் படை

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் எதிரான இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி தங்களிடம் இருந்த ஒரு பெரிய குறையை சரி செய்து இருக்கிறது. பாகிஸ்தானை லீக் சுற்று மற்றும் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணி வீழ்த்திய நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பைனலில் சந்திக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பட்டையைக் கிளப்பி வருகிறார். கில்லும், அவருக்கு நல்ல கம்பெனி கொடுக்கிறார். இந்த நிலையில் நடு வரிசை வீரர்கள் யாரும் பெரிய அளவு சோபிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

Ind vs Pak Final

குறிப்பாக சாம்சன் இந்த போட்டிக்கு முன்பு வரை ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு தொடரில் வெறும் 111.29 என்ற ஸ்டிரைக் ரேட் தான் வைத்திருந்தார். இதேபோன்று நட்சத்திர வீரரான திலக் வர்மா 126 என்று அளவில் அவருடைய ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருந்தார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக கருதப்பட்டது.

இந்த தருணத்தில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்ற ஆட்டத்தில் இந்திய அணி தங்களுடைய குறையை சரி செய்து கொண்டிருக்கிறது. ஐந்தாவது இடத்தில் பேட்டிங் வரிசையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தம்மால் சிறப்பான ஷாட்களை ஆட முடியும் என்பதை நிரூபித்தார்.

குறிப்பாக மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என பறக்கவிட்ட அவர் 23 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 169 என்ற அளவில் இருந்தது. அது மட்டுமல்லாமல் திலக் வர்மா அபாரமாக விளையாடி ஒரு சிக்சர் நான்கு பவுண்டரி என 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 144 என்று அளவில் இருந்தது.

அது மட்டும் இல்லாமல் அக்சர் பட்டேலும் 15 பந்துகளில் 21 ரன்கள் சேர்க்க அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 140 என்ற அளவில் உயர்ந்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான ஃபைனல் ஆட்டத்திற்கு முன்பு மூன்று நடுவரிசை வீரர்களும் தங்களுடைய திறனை வெளிக்காட்டி இருக்கிறார்கள். இதனால் இந்திய அணி தங்களுடைய பேட்டிங் பலத்துடன் பாகிஸ்தானை பைனலில் சந்திக்கிறது. நடுவரிசை வீரர்கள் அதிரடி காட்டியதால், நடப்பு தொடரில் முதல் அணியாக இந்தியா 200 ரன்களை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 27, 2025, 7:30 [IST]
Other articles published on Sep 27, 2025
English summary
Ind vs Pak Final- Indian team course correct their batting ahead of Pakistan game
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+