Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: பைனலில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. ஸ்ரீகாந்த் கருத்து

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை துபாயில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் இலங்கை அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் சிறப்பாக செயல்பட்ட ஆர்ஸ்தீப் சிங் இறுதி போட்டியில் பங்கேற்க வேண்டும் என ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Ind vs Pak

இது குறித்து பேசியஅவர் நான் சிவம் துபேக்கு பதில் ஆர்ஸ்தீப் சிங்கை தேர்வு செய்வேன். ஏனென்றால் சிவம் துபேவுக்கு பேட்டிங் செய்த பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்காது. நான் ஏழு வீரர்களை வைத்துதான் பேட்டிங் செய்வேன். குல்தீப் யாதவ் வேண்டுமென்றால் எட்டாவது வீரராக பேட்டிங் செய்யட்டும்.

எட்டாவது இடத்தில் களமிறங்கி ரன் குவிக்க முடியாத அளவுக்கு குல்தீப் கிடையாது. எட்டாவது இடத்தில் விளையாடும் வீரர் 20 ரன்களோ இல்லை அரை சதமோ அடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 6 பந்துக்கு 10 ரன்கள் அடிக்கக்கூடிய வீரராக இருந்தாலும் போதும், அதனை குறித்து அதுவும் செய்வார் என நான் நம்புகிறேன்.

பந்து வீச்சில் சிவம் துபே இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 4 சுற்றில் இரண்டு விக்கெட்டுகளை சிவம் துபே வீழ்த்தினார். எனவே சிவம் துபே களத்தில் இருப்பதும் இல்லாததும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ராமரை வைத்து விளையாடினாலும் சரி இராவணனை வைத்து விளையாடினாலும் சரி இந்தியா நிச்சயம் வெல்லும் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

இதுபோன்று ஸ்ரீகாந்த் தேர்வு செய்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஐந்தாவது இடத்தை தான் அவர் வழங்கி இருக்கின்றார். நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் சிவம் துபே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். அவருடைய எக்னாமிக் 7.80 என்ற அளவில் இருந்திருக்கிறது.

Story first published: Saturday, September 27, 2025, 23:41 [IST]
Other articles published on Sep 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+