Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: சூர்யகுமார் பைனலில் எவ்வளவு ஸ்கோர் அடிப்பார்.. ஸ்ரீகாந்த் கணிப்பு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான அணி ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் நடப்பு தொடரில் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். கடைசியாக நடைபெற்ற 21 சர்வதேச டி20 போட்டிகளில் அவர்களும் இரண்டு அரை சதம் தான் அடித்திருக்கின்றார். மேலும் அவருடைய சராசரி 20க்கு கீழ் என்ற நிலையில் இருக்கிறது.

suryakumar yadav

ஆனால் இந்த 21 போட்டிகளிலும் சூரிய குமார் தலைமையிலான அணி 19 போட்டிகளில் வென்றிருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் சூரியகுமார் ரன் குவிப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கணித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இறுதி போட்டியில் சூரிய குமார் மிகப்பெரிய ஸ்கோர் அடிப்பார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை அவருடைய பெயரும் ஞாயிறு என்ற சூரியனே குறிக்கும். எனவே 'சண்'டே வில் சூர்யா நிச்சயம் பெரிய ஸ்கோர் குவிப்பார். அவர் குறைந்தபட்சம் 33 ரன்கள் அடிப்பார். என்னுடைய ஒரே ஒரு அறிவுரை எதிர்கொள்ளும் முதல் பந்தையே லெப்ட் சைடில் அடிக்க வேண்டாம். அதற்கு பதில் முதல் 10 பந்துகளை நேராக அடித்து ஆடர் முயற்சி செய்யுங்கள் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக சூரியகுமார் யாதவ் இதுவரை 7 போட்டிகள் விளையாடி இருக்கிறார். இதில் மொத்தமாகவே அவர் 111 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 18 என்ற அளவில் இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 118 என்ற அளவில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தான் எதிராக கடைசியாக அவர் விளையாடிய ஐந்து இன்னிங்சில் 20 ரன்கள் கூட அவர் ஒரு முறை கூட தாண்டியதில்லை.

இந்தக் கட்டத்தில் தான் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் சூப்பர் ஃபோர் சுற்றில் மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி பைனலில் வெற்றி பெற வேண்டும் என்றால் சூரியகுமார் யாதவ் வழக்கமான பேட்டிங் ஆட வேண்டும்.

Story first published: Saturday, September 27, 2025, 23:53 [IST]
Other articles published on Sep 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+