Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் செய்த கேவலமான அரசியல்.. பைனலை வென்றும் கோப்பையை வாங்க முடியாத இந்திய அணி.. என்ன நடந்தது?

துபாய்: ஆசிய கோப்பை வரலாற்றிலே ஒரு மோசமான சம்பவத்தை பாகிஸ்தான் செய்திருக்கிறது. இதன் மூலம் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை தர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்திய அணி கோப்பையில் வென்று மைதானத்தை சுற்றி வரும் காட்சியை பார்க்க வேண்டும் என்று எண்ணி காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றுமே மிஞ்சி இருக்கிறது.

ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு தொடரில் விளையாடும்போது இறுதிப் போட்டியில் வென்று அந்த கோப்பையை தொடும் நிகழ்வுக்காக தான் விளையாடும். ஆனால் போட்டியில் வென்று அந்த கோப்பையை தரப்படவில்லை என்றால், எவ்வளவு மோசமான விஷயமாக இருக்கும்.

Ind vs Pak Final

அதுதான் தற்போது இந்தியாவுக்கு நடந்திருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்து இருந்தது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. அதிலும் மீறி இந்திய அணி விளையாடினாலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் புறக்கணித்தது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் லீக் சுற்று சூப்பர் ஃபோர் மற்றும் இறுதி போட்டி என மூன்று முறையில் இந்தியாவை பாகிஸ்தானை வீழ்த்திருக்கிறது.

இந்த நிலையில் கோப்பையை வாங்க இந்திய அணி தயாராக இருந்தனர். ஆனால் ஆசிய கிரிக்கெட் சங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பாகிஸ்தான் அமைச்சரான மோஷன் நக்வி தான் கோப்பையை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய அணி வீரர்கள் கோப்பையை பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து பெற மாட்டோம் என்று போர் கொடி தூக்கினார்.

இதனால் ஒரு மணி நேரத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கடைசிவரை தான் கோப்பையை கொடுப்பேன் இல்லையென்றால் என் கையில் இன்று வாங்காதீர்கள் என பாகிஸ்தான் அமைச்சர் கூறிவிட்டார். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் மட்டும் ரன்னர் அப்பரிசை பெற்று விட்டு சென்றுவிட்டனர். இந்தியா ஆசிய கோப்பையில் பெறவில்லை. மேலும் வெற்றி பெற்றதற்கான எந்த ஒரு பரிசையும் வாங்கவில்லை.

உங்கள் கையால் பரிசை வாங்க விரும்பவில்லை என்று வீரர்கள் தெரிவித்த போது நியாயமான மனிதராக இருந்தால் அந்த மேடையில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வி ஏறி இருக்கக் கூடாது மற்றும் வேறு ஒரு நபரிடம் இருந்து கோப்பையை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் இது எதுவும் செய்யாமல் தாம் தான் நிற்பேன். விருப்பம் இல்லை என்றால் வாங்கிக் கொள்ளாதீர்கள் என கூறிவிட்டு இந்தியாவுக்கு கோப்பையை பெற முடியாத ஒரு நிலையை மோஷின் நக்வி ஏற்படுத்தி விட்டார். இதனை கடுமையாக குற்றச்சாட்டு உள்ள ரசிகர்கள் பாகிஸ்தான் இவ்வளவு கேவலமாக அரசியல் செய்ய வேண்டுமா என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, September 29, 2025, 5:00 [IST]
Other articles published on Sep 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+