Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: ஒரே ஒரு சூப்பர் ஓவர்.. சிஎஸ்கே வீரரை காலி செய்த ஆர்ஸ்தீப் சிங்.. பைனலில் யாருக்கு இடம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் t20 தொடரில் இந்திய அணி இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களை வைத்து விளையாடுகிறது. இதன் மூலம் பும்ராவை தவிர வேறு எந்த ஒரு ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்துவீச்சாளரும் இல்லாத நிலை இந்திய அணியில் இருந்தது.

மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில் மற்றும் ஹர்திக் பாண்டியா சிவம் துபை வைத்து இந்திய அணி ஓவர்களை கட்டமைத்தது. ஆல்ரவுண்டரான சிவம் துபே பேட்டிங்கில் இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பந்துவீச்சில் இதுவரை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Arshdeep Singh

இதில் சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 33 ரன்கள் விட்டுக் கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிவம் துபேவில் மித வேகமான பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான சூப்பர் ஃபோர் சுற்றில் சிவம் துபேவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

அப்போது களமிறங்கிய அக்சர் பட்டேல் நான்கு ஓவர்கள் வீசி 46 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆனால் சூப்பர் ஓவர் போன்ற நெருக்கடி நிறைந்த கட்டத்தில் பந்துவீச்சில் வெறும் 33 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இடது கை வேகப் பந்துவீச்சாளரான ஆர்ஸ்தீப்பை சேர்ப்பதா இல்லை ஆல்ரவுண்டரான சிவம் துபேவை சேர்ப்பதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், அகசர் பட்டேல், திலக் வர்மா போன்றோர் தங்களுடைய திறமையை காட்டி இருக்கிறார்கள் இதனால் கூடுதலாக ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டரை சேர்க்காமல் ஆர்ஸ்தீப் சிங் போன்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளரை சேர்க்கலாமா என்ற யோசனையில் கம்பீர் இருக்கின்றார்.

ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தால் சிவம் துபை போன்ற வீரர் பேட்டிங்கில் கை கொடுப்பார். ஆனால் பேட்டிங்கில் அவர் பெரிய பார்மில் இல்லாததும் ஒரு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. எனினும் சூப்பர் ஃபோர் சுற்றில் பும்ரா சரியாக செயல்படவில்லை என்றாலும் சிவம் துபே பாகிஸ்தான் எதிராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 33 ரன்கள் விட்டுக் கொடுத்தது ஒரு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆல் துபேக்கு இடம் கிடைக்குமா இல்லை ஆர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Story first published: Saturday, September 27, 2025, 8:00 [IST]
Other articles published on Sep 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+