Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: எழுதி வச்சிக்கோங்க! அபிஷேக் மட்டும் 2 ஓவரில் அவுட்டானால்,இந்தியா தோற்கும்- சோயிப் அக்தர்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி சுற்றுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தகுதி பெற்று இருக்கிறது. இதன் மூலம் நடப்பு தொடரில் இரு அணிகளும் மூன்றாவது முறையாக பல பரிட்சை நடத்துகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மோசமாக இருந்தாலும் பந்து வீச்சில் அந்த அணி மீண்டும் ஒரு கம்பேக்கை கொடுத்திருக்கிறது. இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

Shoaib Akthar

இந்த நிலையில் இறுதி போட்டி குறித்து செய்தியாளருடன் பேசிய சோயிப் அக்தர், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியாவை வீழ்த்துவோம் என்ற மன உறுதியுடன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்க வேண்டும்.

இந்தியாவின் உத்வேகத்தை உடைக்கும் பணியை பாகிஸ்தான் செய்ய வேண்டும். வங்கதேசத்துக்கு எதிராக எவ்வாறு விளையாடினார்களோ, அதே போல் ஒரு மன நிலையை வைத்துக் கொண்டு இந்தியாவை சந்திக்க வேண்டும். இந்தியாவை வீழ்த்த 20 ஓவர்கள் தேவையில்லை. ஆனால் அவர்களுடைய விக்கெட்டுகளை எடுத்தாலே போதும், ஆட்டம் பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறிவிடும்.

நான் சொல்வதை வேண்டுமானால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இறுதிப்போட்டியில் அபிஷேக் ஷர்மா முதல் இரண்டு ஓவர்களில் ஆட்டம் இழந்து விட்டால், இந்திய அணி நிச்சயம் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும். இந்திய அணியின் பலமே அவர்கள் பெறும் தொடக்கம்தான். எனவே அபிஷேக் ஷர்மாவை விரைவில் ஆட்டம் இழக்க வைத்து விட்டால், மற்ற வீரர்கள் தடுமாறுவார்கள்.

அபிஷேக் சர்மாவும் ஷாட் தேர்வில் மிகவும் கவனம் செலுத்துவார். இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் எதிராக பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் விளையாடுவார். ஆனால் நீங்கள் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற மனநிலையில் சிறப்பாக செயல்பட வேண்டும். நீங்கள் களத்தில் போராட வேண்டும் என்ற மனநிலையில் வந்தால் நிச்சயம் இந்திய அணி ரன் எடுக்க கடுமையாக போராட வேண்டும்.

கம்பீர் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். அவர் தனது வீரர்களிடம் உங்களுடைய சிறந்த ஆட்டத்தை பாகிஸ்தான் எதிராக வெளிப்படுத்துங்கள் என்று கூறினார். பாகிஸ்தான் ஒரு மோசமான அணிதான். வீரர்கள் தேர்வில் சரி இருக்காது. ஆனால் இறுதிப் போட்டிக்குள் பந்துவீச்சாளர் என்றால் நிச்சயம் அவர்கள் பைனலில் வெல்வார்கள். இப்படி நிறைய முறை நடந்திருக்கிறது என்று ஷோயிப் அக்தர் கூறியுள்ளார்.

Story first published: Friday, September 26, 2025, 12:56 [IST]
Other articles published on Sep 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+