Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: பாகிஸ்தானை மீண்டும் மொக்கை ஆக்கிய சூர்யகுமார்.. பயமே வேண்டாம் என வீரர்களுக்கு அறிவுரை

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச்சுற்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது இந்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் முதல் முறையாக பல பரிட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா கடைசி வரை போராடி திரில் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இந்தியா போராடி வென்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டி இவ்வளவு நெருக்கடி நிறைந்ததாக இந்தியாவுக்கு இல்லை.

Suryakumar

இதனால் ஏற்கனவே பாகிஸ்தான் எங்களுக்கு பெரிய சவால்களை கொடுப்பதில்லை என்று சூரியகுமார் கூறியிருந்தார் .இந்த நிலையில் இறுதி போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை சந்திப்பதால் அந்த அணியை மட்டம் தட்டும் விதமாக எனக்கு என்னவோ இந்த இலங்கை ஆட்டம் தான் பைனல் போல் நெருக்கடியை கொடுத்ததாக கூறினார்.

இதன் மூலம் பாகிஸ்தான் போட்டி எங்களுக்கு எந்த ஒரு சவாலையும் தரவில்லை என்பதை மறைமுகமாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இறுதிப் போட்டி குறித்து ரவி சாஸ்திரி கேள்வி எழுப்ப, அதற்கு அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை என்பது போல் சூரியகுமார் பதில் அளித்தார். நாங்கள் இன்று இரவு முழு ஓய்வில் இருப்போம். இறுதிப்போட்டி குறித்து தற்போது நாங்கள் எதுவும் யோசிக்கவில்லை.

சில வீரர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் நாளைய நாள் முழு ஓய்வில் இருக்கப் போகிறோம். அதன் பின் இறுதிப்போட்டியில் இன்று எவ்வாறு ஆக்ரோஷமாக விளையாடினோமோ அதே போல் பைனலில் விளையாடுவோம். நான் வீரர்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்.

உங்களுடைய திட்டங்களை சரியாக களத்தில் செயல்படுத்துங்கள். என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள்.எதைப் பற்றியும் பயப்பட வேண்டாம். அதை தான் நான் முக்கியமான விஷயமாக நினைக்கின்றேன். வீரர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது அனைத்தும் அவர்களுக்கு கிடைத்துவிட்டது என்று நான் நினைக்கின்றேன். இறுதிப்போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, September 27, 2025, 7:00 [IST]
Other articles published on Sep 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+