Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia cup: சூர்யகுமார் ஸ்கோர் ஏதோ பின்கோடு நம்பர் போல் இருந்தது.. கில்லையும் வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த்

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் அடித்த ரன்கள் ஏதோ அட்ரஸ் பின்கோடு நம்பர் போல் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியிருக்கிறார். இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றாலும் கேப்டன் சூரிய குமாரின் பேட்டிங் மிக கவலையை அளிக்கும் விதமாக இருக்கிறது.

சூரியகுமார் ஒருமுறை கூட இந்த போட்டியில் அரை சதம் அடிக்கவில்லை. இந்த தொடரில் மொத்தமாகவே அவர் 72 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அவருடைய சராசரி 18 என்று அளவிலும் ஸ்ட்ரைக் ரேட் 102 என்று அளவிலும் இருக்கிறது.

Asia cup 2025 ind vs pak kris srikanth

சூரியகுமார் யாதவ் கடந்த இரண்டு ஆண்டுகளாக 30 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே நான்கு அரை சதம்தான் அடித்திருக்கிறார். இது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், சூரியகுமார் யாதவ் குறித்து நாம் பேசிய ஆக வேண்டும். அவர் அடித்த ரன்களை எல்லாம் பார்க்கும் போது ஏதோ அட்ரஸ் பின்கோடு நம்பர் போல் இருக்கிறது.

பாகிஸ்தான் அணி பேட்டிங் ஸ்கோரிங் பார்த்தால் அப்படித்தான் இருந்தது. சூரியகுமார் யாதவ் ஃபார்ம் எனக்கு கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. இதேபோன்று கில்லும் இந்த தொடரில் சரியாக விளையாடவில்லை. கில் டி20 கிரிக்கெட்டில் அபாயகரமான வீரராக இல்லை. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார்.

ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவர் ஏன் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. தற்போது டி20 உலக கோப்பை வேறு வருகிறது
கில் இப்படி விளையாடினால் அவரை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

முதலில் ஆரம்பகட்ட அணியில் கூட கில் இல்லை. ஆனால் தற்போது வேண்டுமென்று அவரை துணை கேப்டனாக நியமித்திருக்கிறார்கள். ஆசிய கோப்பை தொடருக்கு வேண்டுமானாலும் இந்த அணி சரியாக இருக்கலாம். ஆனால் டி20 உலக கோப்பையை வெல்ல இந்த அணி சரியான அணி கிடையாது. இது போல் ஒரு அணியை வைத்து நாம் விளையாடினால் நிச்சயம் நம்மால் தொடரை வெல்ல முடியாது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, September 29, 2025, 17:58 [IST]
Other articles published on Sep 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+