Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: கோப்பையே இல்லாமல் கொண்டாடிய இந்தியா.. பாகிஸ்தான் வயிறை எரியவிட்ட சூர்யகுமார் சம்பவம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நடப்பு தொடரில் லீக் சுற்று சூப்பர் ஃபோர் என மொத்தம் மூன்று முறை பாகிஸ்தான் அணியை இந்திய அணி ஓட விட்டு இருக்கிறது.

இதன் மூலம் ஆசிய கிரிக்கெட்டில் நாங்கள் தான் கிங் என்பதை மீண்டும் கம்பீர் படை நிரூபித்து இருக்கிறது. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் வென்றவுடன் கோப்பையை வாங்கி கொண்டாடலாம் என்று வீரர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

Ind vs Pak Final

ஆனால் கோப்பையை பாகிஸ்தான் அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் தமிழகத்தின் தலைவருமான மோஷின் நக்வி தான் வழங்கப் போகிறார் என தெரிந்தவுடன் அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. மோஷின் நக்வி, கையால் தாங்கள் கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய வீரர்கள் போர் கொடி தூக்கினர். ஆனால் நான்தான் கோப்பையை வழங்குவேன்.

இல்லையென்றால் என்னிடம் இன்று வாங்கிக் கொள்ளாதீர்கள் என மோசின் நக்வி, பிடிவாதமாக இருந்தார். இதனை அடுத்து இந்தியா இன்று கோப்பையை வாங்கவில்லை என்று அறிவிப்பு வெளியானது.எனினும் கோப்பையை வாங்கவில்லை என்றாலும் கோப்பையில் இருப்பது போல் நடித்து இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

எப்படி டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா கோப்பையை வாங்கிக் கொண்டு நடந்து வந்தாரோ, அதை போல் சூரியகுமார் கோப்பையை இல்லாமல் வெறும் கையால் நடித்து ரோகித் சர்மா போல் நடந்து வந்து தனது அணி வீரர்களுடன் கொடுத்து நடித்த உடனே வீரர்களும் கோப்பையே இல்லாமல் கோப்பையை வாங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இதன் மூலம் உண்மையான பரிசளிக்கும் நிகழ்ச்சி எப்படி நடக்குமோ அதேபோல் கோப்பையே இல்லாமல் இந்திய வீரர்கள் செய்து காட்டினர். இது பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்விக்கு சரியான நோஸ்கட்டாக மாறி இருக்கிறது. இந்திய அணியின் இந்த கொண்டாட்டம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Story first published: Monday, September 29, 2025, 2:37 [IST]
Other articles published on Sep 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+